ஈரோடு: குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதால், பயணிகள் சரியான நேரத்திற்கு பேருந்துகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருவதால் நாளை(மே.24) முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக நேற்று(மே.22) மதியம் முதல் இன்று (மே.23) இரவு வரை அனைத்துக் கடைகளும் திறந்திருக்கும் எனவும், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
தொடர்ந்து நேற்று(மே.22) மாலை முதல் சத்தியமங்கலத்தில் இருந்து ஈரோடு, கோயம்புத்தூர் , திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று(மே.23) காலை சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து மிகவும் குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதால், பயணிகள் சரியான நேரத்திற்கு பேருந்துகள் கிடைக்காமல் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கின்றனர்.
குறிப்பாக சத்தியமங்கலம் பகுதியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தாளவாடி, மேட்டுப்பாளையம், அந்தியூர் உள்ளிட்டப் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் வராததால் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாகப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே நிற்பதால், வெளியூர் செல்லும் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.