ஈரோடு மாவட்டம் கொடிவேரி தடுப்பணையிலிருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை ஆகிய வாய்க்காலுக்கு முதல்போக பாசனத்துக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோா் தண்ணீரை திறந்து வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “ஈரோடு மாவட்டத்தில் தடுப்பணைகள் கட்டுப்பட்டுவருகின்றன. தடுப்பணைப்புகளில் இணைப்பு சாலை தேவைப்படும் எனில் பொதுப்பணித்துறை ஆய்வு செய்து முடிவு செய்வர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கையிருப்பு உள்ளன. தஞ்சை சிறப்பு மண்டலமாகவும், தென்மாவட்டத்திற்கு தேவையான தண்ணீர் திறப்பு இருப்பதாலும் தமிழ்நாட்டில் விவசாயம் சிறப்பாக உள்ளது. இந்தியாவிலேயே உணவு உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது” என்றார்.
செல்போன் இல்லாததால் ஆன்லைன் வகுப்புகளில் சேரமுடியாத நிலையில் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், அது போன்று இனி வரும் காலங்களில் ஒரு உயிர்கூட போகாது எனத் தெரிவித்தார். மேலும், 10ஆம் வகுப்பு தனித்தேர்வு விரைவில் அறிவிக்கப்படும் எனக் கூறினார்.
இதையும் படிங்க....பல்வேறு துயர நிகழ்வுகளில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு