ஈரோடு: புன்செய்புளியம்பட்டியில் உள்ள வாரச்சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. இங்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் சின்ன வெங்காயம் மற்றும் விதை வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்நிலையில் இன்று புன்செய் புளியம்பட்டி வாரச்சந்தைக்கு 800க்கும் மேற்பட்ட விதை வெங்காய மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். கடந்த இரண்டு வாரங்களாக கிலோ 60 ரூபாய்க்கும் மேல் விற்ற விதை வெங்காயம் இன்று விலை குறைந்து கிலோ 35 முதல் 45 ரூபாய் வரை விற்பனையானது.
விதை வெங்காய விலை குறைந்ததால் வெங்காயம் நடவு செய்ய விவசாயிகள் அதிகளவில், விதை வெங்காயத்தை வாங்கிச் சென்றனர். விதை வெங்காயத்தை வாங்க தாளவாடி மலைப்பகுதி மற்றும் கர்நாடக மாநிலம் கொள்ளேகால், சாம்ராஜ்நகர், மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்திருந்தனர்.
கடந்த இரண்டு வாரங்களாக வரத்து குறைந்ததால் விதை வெங்காயம் விலை அதிகரித்த நிலையில் இன்று வரத்து அதிகரித்ததால் விதை வெங்காய விலை குறைந்துள்ளது. அதனால் விளை நிலங்களில் பயிரிட அதிகளவில், விதை வெங்காயத்தை வாங்கிச்செல்வதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சினிமா பாணியில் புகையிலை விற்ற கடைக்கு சீல் வைத்த அரியலூர் ஆட்சியர்!