ETV Bharat / state

"விஷமாகும் பவானி சாகர் நீர்" ஆர்ப்பாட்டத்தில் குதித்த ஈரோடு மக்கள்.. நடந்தது என்ன? - erode seithikal

சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, பவானிசாகர் அணையில் ரசாயன கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி கம்யூனிஸ்ட் கட்சியில் அடங்கிய அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விசமாகும் பவானிசாகர் அணை நீர்! விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Jun 6, 2023, 3:09 PM IST

பவானி சாகர் அணையில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

ஈரோடு: ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானி சாகர் அணையில், காகித ஆலை மற்றும் ஜவுளி ஆலைகளிலிருந்து வெளியேறும் ரசாயன கழிவுநீர் சிறுமுகை, மேட்டுபாளையம் பவானி ஆற்றில் நேரடியாகக் கலப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, இதைத் தடுக்கக்கோரி சுற்றுச்சூழல் தினமான நேற்று (ஜூன் 5) பவானி சாகரில் கம்யூனிஸ்ட் கட்சியில் அடங்கிய அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1955-ஆம் ஆண்டு ரூ.10 கோடி செலவில் கட்டப்பட்ட பவானி சாகர் அணையின் நீர்மட்ட உயரம் 105 அடியாக உள்ளது. இந்த அணையிலிருந்து திறக்கப்படும் நீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் டிசம்பர் 15-ஆம் தேதி வரை முதல் போக நெல் பாசனத்துக்கு 24 டி.எம்.சி தண்ணீரும், டிசம்பர் 15-ஆம் தேதி முதல் மார்ச் 15-ஆம் தேதி வரை எள், கடலை பாசனத்துக்கு 12 டி.எம்.சி தண்ணீரும் அணையிலிருந்து திறந்து விடப்படுகிறது. மேலும், கால்நடைகளின் உயிர்த்தண்ணீர் மற்றும் தீவனத்துக்கு விவசாயிகள் இந்த அணையைத் தான் நம்பியுள்ளனர்.

பில்லூர் அணையில் இருந்து மேட்டுபாளையம், சிறுமுகை வழியாக பயணிக்கும் பவானி ஆற்றில், இரவு நேரத்தில் குழாய் வழியாக நேரடியாகக் காகித மற்றும் ஜவுளி ஆலை ரசாயன கழிவுநீர் கலப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பிருந்தே பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரில், ரசாயன கழிவுநீர் கலந்திருப்பதும், இதன் காரணமாகத் தண்ணீரின் தன்மை முற்றிலும் மாறி துர்நாற்றம் வீசி, நீர் மாசுபாட்டுடன் காணப்பட்டதாக விவசாய அமைப்புகள், பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.

இந்த புகாரின் பேரில் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரில் மாதிரி நீர் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். தொடர்ந்து பவானி சாகர் அணையிலிருந்து வெளியேறும் ரசாயனம் கலந்த நீரை சுமார் 30 லட்சம் பேர் பருகுவதால், மக்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாய நிலங்கள் நஞ்சாகிப் போனதுடன் கால்நடைகளுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

எனவே, நீர் மாசுபடுவதற்குக் காரணமாக உள்ள சிறுமுகை, மேட்டுப்பாளையம், ஆலங்கொம்பு, தேக்கப்பட்டி ஆகிய பகுதியில் உள்ள காகித, ஜவுளி ஆலைகளில் வெளியேறும் தண்ணீரை சுத்திகரித்து விவசாயத்துக்கு பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், சத்தியமங்கலத்தில் பெண்கள் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை முகாம் அமைத்து, அணை நீரை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் ரசாயன கழிவு நீருக்கும் புற்றுநோய்க்கும் தொடர்புள்ளதாக என மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும் எனக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டமானது சுற்றுச்சூழல் தினமாக நேற்று, பவானி சாகரின் முன்னாள் எம்.எல்.ஏ.பி.எல்.சுந்தரம் தலைமையில் அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், விவசாய அமைப்புகளைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, பவானி ஆற்றில் ரசாயன கழிவுநீர் கலப்பதைத் தடுக்காவிடில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போராட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க: பிளீச்சிங் பவுடர் ஊழல்: தருமபுரி மாஜி கலெக்டர் மலர்விழி வீடு உள்ளிட்ட 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.