ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் கச்சேரி வீதியில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளியில், பழங்கால நாணயங்களின் கண்காட்சி நடைபெற்றது.
இந்தக் கண்காட்சியில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. மேலும், மிகவும் பழமைவாய்ந்த கேமராக்கள், ரேடியோ, டைப்ரைட்டிங் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு வகையான பழமை வாய்ந்த பொருள்களும் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.
இதை பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.
அப்போது, பொருள்கள் எந்த ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து மாணவ மாணவிகள், பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கைவினைப் பொருள்கள் கண்காட்சியைத் தொடங்கிவைத்த தலைமைச் செயலர் அஸ்வினி!