ETV Bharat / state

இரட்டை கொலை வழக்கில் வடமாநில இளைஞருக்கு ஆயுள் தண்டனை - ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு: இரட்டை கொலை வழக்கில் வடமாநில இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரட்டை கொலை வழக்கில் வடமாநில இளைஞருக்கு ஆயுள் தண்டனை

author img

By

Published : Apr 27, 2021, 8:48 AM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கவுந்தப்பாடி பி.மேட்டுப்பாளையத்தில் உள்ள விசைத்தறி கூடத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த ரவீந்திரகுமார், நவீன்குமார், சுதேந்திரகுமார் வர்மா ஆகியோர் பணியாற்றி வந்தனர். 2020 ஜனவரி 1ஆம் தேதியன்று இரவு பணியில் இருந்த இவர்களுக்குகிடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது, ரவீந்திரகுமார் தறிப்பட்டரையில் இருந்த இரும்பு பைப்பால் நவீன்குமார், சுதேந்திரகுமார் வர்மா ஆகியோரை தாக்கி கொலைசெய்தார். இது தொடர்பாக ரவீந்திரகுமாரை காவல் துறையினர் கைதுசெய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை ஈரோடு மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன் இரட்டை கொலை செய்த ரவீந்திரகுமாருக்கு ஆயுள் தண்டனையும், கொலையை மறைத்த குற்றத்திற்காக எட்டு ஆண்டுகள் தண்டனையும், மூன்றாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். பின்னர் ரவீந்திரகுமார் கோவையில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: கொலை வழக்கில் பிணையில் இருக்கும் நபரின் சகோதரர் வெட்டி கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.