ETV Bharat / state

ரயிலில் கஞ்சா கடத்திய வடமாநில இளைஞர் கைது - 7 கிலோ பறிமுதல்

ஈரோடு வழியாக இயக்கப்படும் ரயிலில் கஞ்சா கடத்திய வடமாநில இளைஞரைக் கைது செய்து, அவரிடமிருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ரயிலில் கஞ்சா கடத்திய வடமாநில இளைஞர் கைது- 7 கிலோ பறிமுதல்

author img

By

Published : Sep 2, 2022, 8:04 PM IST

ஈரோடு: ரயில் நிலையம் வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து சென்று வருகின்றன. குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து ஈரோடு வழியாக அதிக அளவில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சமீப காலமாக வடமாநிலங்களில் இருந்து ஈரோடு வழியாக இயக்கப்படும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதாக ஈரோடு ரயில்வே போலீசாருக்குப் புகார்கள் வந்தன. அதன்பேரில், ஈரோடு ரயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ஈரோடு ரயில் நிலையத்தில் வந்து நிற்கும் வெளி மாநில ரயில்களில் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை நடத்தி வருகின்றனர். இதில் கேட்பாரற்று கிடந்த கஞ்சாவைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் இருந்து கேரளா செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில், ஈரோடு ரயில் நிலையத்தின் 2ஆவது நடைமேடையில் வந்து நின்றது. அப்போது ஈரோடு ரயில்வே போலீசார், ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது எஸ்.5 பெட்டியில் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது இளைஞர் ஒருவர் ஒரு பெரிய பை வைத்திருந்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அந்தப் பையை சோதனை செய்தபோது அதில் 7 கிலோ கஞ்சாவை மறைத்துக்கொண்டு வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.70 ஆயிரம் இருக்கும். அந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் மேற்கு வங்காளம், கோல்பாரா பகுதியைச் சேர்ந்த பவதுல்லா எனத் தெரியவந்தது. அவர் அந்த கஞ்சாவை கேரளாவிற்கு விற்கச்சென்றது தெரியவந்தது.

இதையடுத்து ஈரோடு ரயில்வே போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து பவதுல்லாவை கைது செய்தனர். அவரிடமிருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கஞ்சாவை அவர் கல்லூரி மாணவர்களுக்கு விற்பதாக கொண்டு சென்றாரா? என்று போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

இதன் பின்னணியில் யார் ? யார்? இருக்கிறார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க:கஞ்சா போதையில் கடையை அடித்து உடைத்த ஐந்து பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.