ETV Bharat / state

மாயாற்றில் வெள்ளப்பெருக்கு: ஆற்றை கடக்கக்கூடாது என ஆட்சியர் எச்சரிக்கை! - நீலகிரி மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

ஈரோடு: பலத்த மழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அத்தியாவசிய தேவைக்குக்கூட பொதுமக்கள் ஆற்றைக் கடக்கக்கூடாது என நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாயாற்றில் வெள்ளப்பெருக்கு
மாயாற்றில் வெள்ளப்பெருக்கு
author img

By

Published : Aug 6, 2020, 7:31 PM IST

நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் கனமழை காரணமாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கூடலூர் கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் மாயாற்றில் கலந்ததால் ஆற்றில் செந்நிறத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாயாற்றின் இருபுறமும் வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுவதால் விவசாயிகள் ஆடு, மாடுகளை கரையோரம் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார்.

மாயாற்றில் நீரின் வேகம் அதிகமாக உள்ளதால் பரிசல் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யவும் தெங்குமரஹாடா ஊராட்சி நிர்வாகத்துக்கு ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் வெள்ளநீர் வேகம் காரணமாக மலைப்பகுதியில் இருந்து கற்கள், மரக்கிளைகள் அடித்து வருதால் கிராம மக்கள் வெள்ளம் வடியும் வரை அத்தியாவசிய தேவைக்கு கூட ஆற்றை கடக்கக்கூடாது, ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது எனவும் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் அவசர தேவைக்கு வெளியே செல்லமுடியாத நிலையில் கல்லாம்பாளையம், அல்லிமாயாறு, தெங்குமரஹாடா பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கோவையில் பலத்த காற்றுடன் கூடிய மழை - சாய்ந்த பேருந்து நிலையத்தின் பெயர்ப் பலகை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.