ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கடம்பூர் பகுதியிலுள்ள குன்றி, அணில், நத்தம் அருகேயுள்ள மலைக் கிராமங்களில் ஆயிரம் மலைவாழ் ஏழை குழந்தைகள் கல்வி கற்க வழியின்றி சிரமப்படுகிறார்கள்.
இதனால் அதிகளவு குழந்தைகள் உள்ள அந்தக் கிராமங்களில் நூலகம் இல்லாமல் இருப்பதால், இந்தக் குறையைப் போக்க உணர்வுகள் அமைப்பு, தன்னார்வலர்கள் வீடு தேடி புத்தகங்களைப் பிச்சை எடுத்துவருகின்றனர்.
இது குறித்து, உணர்வுகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மக்கள் ராஜன் கூறுகையில்,
"உங்கள் குழந்தைகள் படித்து முடித்த புத்தகங்கள், பொது அறிவு, பழைய மற்றும் புதிய புத்தகங்கள் எதுவாக இருப்பினும் நாங்கள் பெற்றுக்கொள்கிறோம். உங்கள் குழந்தைகள் பயன்படுத்திய தூய்மையான புதிய, பழைய துணிகள் இருந்தால், அதையும் நாங்கள் மலைவாழ் குழந்தைகளுக்குப் பெற்றுக்கொண்டு அளிப்போம்.
மேலும், நூலகத்திற்குத் தேவையான எந்தப் பொருள்கள் இருந்தாலும், கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்" எனத் தெரிவித்தார்.