ETV Bharat / state

இளைஞர் கொலை வழக்கில் புதிய திருப்பம் : காவல் துறை விசாரணை! - தமிழ் குற்ற செய்திகள்

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே சில தினங்களுக்கு முன் நடைபெற்ற இளைஞர் கொலை வழக்கில், இளைஞரின் அடையாளம் காணப்பட்டு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

New twist in youth murder case: Police investigation!

author img

By

Published : Feb 23, 2021, 4:51 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கரையோரம் சித்தி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. கடந்த 20ஆம் தேதி இக்கோயில் பூசாரி கோபாலகிருஷ்ணன் வழக்கமான கோயில் பூஜைக்கு வாசல் கதவை திறந்தபோது, கதவருகே 20 வயதுள்ள இளைஞர் கொலை செய்யப்பட்ட கிடந்தது தெரியவந்தது.

இது குறித்து கோயில் பூசாரி சத்தியமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இறந்துகிடந்த நபரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் காவல் துறையின் முதல்கட்ட விசாரணையில், இறந்து கிடந்த நபரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு அடையாளம் தெரியாத நபர் தப்பியோடியது தெரியவந்தது. இதையடுத்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு குற்றவாளியை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.

இதற்கிடையே கொலையான நபரின் உடலில் பெங்களூரு சென்றுவந்த பஸ் டிக்கெட் இருந்ததை கைப்பற்றி விசாரித்தபோது, இறந்தவரின் அடையாளம் தெரிந்தது. இறந்த நபர் கோட்டுவீராம்பாளையத்தைச் சேர்ந்த அப்துல் ரஜாக்(20) என்றும், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி கர்நாடக மாநிலத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து உயிரிழந்தவரின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:சென்னையில் ஹெராயின் விற்பனை: வடமாநில கும்பல் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.