ETV Bharat / state

விபத்துகளைத் தடுக்க சூரிய ஒளியில் ஒளிரும் விளக்குகள்! - விளக்குகள்

ஈரோடு: விபத்துகளைத் தடுக்க சாலை சந்திப்புகளில் சூரிய ஒளி சக்தி மூலம் ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

சூரிய ஒளியில் ஒளிரும் விளக்குகள்
author img

By

Published : Jun 11, 2019, 11:44 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து அத்தாணி செல்லும் சாலையில் உள்ள எம்ஜிஆர் நகர் பகுதி மேடும், பள்ளமுமாக உள்ளது. இதனால் எதிரே வரும் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துகள் ஏற்படுகின்றன.

விபத்துகளைத் தடுக்க சூரிய ஒளியில் ஒளிரும் விளக்குகள்

இந்நிலையில், சத்தியமங்கலம் அத்தாணி சாலை எம்ஜிஆர்நகர் சந்திப்பில் சூரிய ஒளி சக்தி மூலம் இயங்கும் ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விளக்குகள் 24 மணி நேரமும் பயன்பாட்டில் இருப்பதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல உதவுகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள், ‘24 மணிநேரமும் ஒளிரும் விளக்குகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க உதவுகிறது. இந்த ஒளிரும் விளக்குகள் ஓரிரு இடங்களில் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. முக்கியச் சாலைகளில் உள்ள சந்திப்புகளிலும் இது போன்ற ஒளிரும் விளக்குகள் வைக்க வேண்டும். பள்ளி, கல்லூரி போன்ற இடங்களிலும் இதனை விரிவுபடுத்த வேண்டும்’ என்று கோரிக்கைவிடுத்துள்ளனர்.

விபத்துகளை  தடுக்க சாலை சந்திப்புகளில் 
சூரியஒளி சக்தி மூலம் ஒளிரும் விளக்குகள்  

--
;டி.சாம்ராஜ்,
செய்தியாளர்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216

TN_ERD_01_11_SATHY_SOLAR-SIGNAL_SYSTAM_VIS_TN10009
(Visual  FTP இல் உள்ளது)

விபத்துகளை  தடுக்க சாலை சந்திப்புகளில்
சூரியஒளி சக்தி மூலம் ஒளிரும் விளக்குகள் : பள்ளி அருகே வைக்க மக்கள் கோரிக்கை

சத்தியமங்கலம் அத்தாணி சாலையில் உள்ள எம்ஜிஆர் நகர் மேடு பகுதியில் அடிக்கடி நிகழும் விபத்துகளை தடுக்க சூரியஒளி சக்தி மூலம் ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

சத்தியமங்கலத்தில் இருந்து அத்தாணி செல்லும் சாலையில் கல்லூரிகள், மாணவர் தங்கும்விடுதிகள், மருத்துவமனை மற்றும் தொழிற்சாலைகள்  இருப்பதால் இப்பகுதி போக்குவரத்து நெரிச்சல் ஏற்படுகிறது.  எதிரே வரும் வாகனங்கள் தெரியாதபடி மேடு மற்றும் சரிவான பகுதியை கொண்டுள்ளதால்  இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனை தடுப்பதற்கு விபத்து தடுப்பு சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் அத்தாணி சாலை எம்ஜிஆர்நகர் சந்திப்பில் சூரிய ஒளி சக்தி மூலம் இயங்கும் ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் இந்த விளக்குகள் பயன்பாட்டில் இருப்பதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல உதவுகிறது. இந்த ஒளிரும் விளக்குகள் ஓரிரு இடங்களில் மட்டுமே வைத்துள்ளதால் முக்கிய சாலைகளில் உள்ள சந்திப்புகளில் இது போன்ற ஒளிரும் விளக்கும் வைக்க வேண்டும் என்றும் பள்ளி, கல்லூரி போன்ற இடங்களிலும் இதனை விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.