ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், பணிக்கு செல்லும் பெண்களுக்கு தமிழ்நாடு அரசின் மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அதனை தொடர்ந்து பணிக்கு செல்லும் பெண்கள் 225 பேருக்கு, ரூ.56 லட்சம் செலவில் மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் புதிய கல்வித்திட்டத்தின் கீழ் குறியீடு மூலம் மாணவர்கள் பாடம் கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் இத்திட்டம் முதன் முதலாக கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், அரசுப் பள்ளி மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேச இரண்டு ஆயிரம் வார்த்தைகள் கொண்ட சி.டி. தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அது மாணவர்களுக்கு அளிக்கப்படும் என தெரிவித்தார்.