ஈரோடு: கரோனா பரவல் தீவிரமடைந்து அதன் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசு கடந்த 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அறிவித்தது. அன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மார்கெட்டுகள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கியிருந்தது.
இந்நிலையில், ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் எப்போதும் கூட்டம் நிரம்பி காணப்படும். ஆனால், நேற்று (மே.15) அதற்கு மாறாக பொதுமக்கள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. வியாபாரிகள் காய்கறிகள் தேக்கமடைந்து பெரும் நஷ்டம் அடைந்துள்ளதாகவும் காய்கறி வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர். மேலும், காலை 10 மணி வரை காய்கறி கடைகள் இயங்கும் என அரசு அறிவித்திருந்தது. ஆனால், காலை 7 பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்ப்டவில்லை என்று மாநகராட்சி அலுவலர்கள் மீது நேதாஜி காய்கறி சந்தை வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சேலத்தில் தம்பதி உடல்கள் மீட்பு