ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் மற்றும் சுயேச்சை என 19 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 29 மண்டலங்களில் 349 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதற்காக 419 வாக்குப்பதிவு இயந்திரங்களும் 838 வேட்பாளர்கள் பட்டியல் இயந்திரங்களும் 471 ஒப்புகைசீட்டு இயந்திரங்களும் வந்துள்ளன.
வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பேட்டரிகள் பொருத்தப்பட்டு ஒயர்கள் இணைக்கப்பட்டு அதன் பின்னர் வாக்காளர்கள் பெயர் மற்றும் சின்னங்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்பணியில் தேர்தல் பணியாளர்கள், வருவாய்துறையினர், வாக்குச்சாவடி அலுவலர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் பணியை கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனிதேவி மேற்பார்வையிட்டு வருகிறார். மேலும் இப்பணிகள் இரண்டு நாள்கள் நடைபெறும் என்றும் அதன் பின்னர் வாக்குசாவடிகளுக்கு அனுப்பப்படும் பொருள்கள் பிரித்து பேக் செய்யப்படும் என்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின்