ETV Bharat / state

"விவசாயிகளை அச்சுறுத்தி நிலத்தை கையகப்படுத்தும் அரசு" - நல்லசாமி கண்டனம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 18, 2023, 10:26 AM IST

Palm wine nallasamy: ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக விவசாயி சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் நல்லசாமி, திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா பகுதியில் அமையும் சிப்காட்டிற்கு எதிர்த்து போராடிய விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்ததை கண்டித்துப் பேசினார்.

விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்ததை கண்டித்த நல்லசாமி

ஈரோடு: ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய விவசாயி சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் நல்லசாமி, திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா பகுதியில் அமையும் சிப்காட்டிற்கு எதிர்த்துப் போராடிய விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்ததைக் கண்டித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், “திருவண்ணாமலை செய்யாறு அருகில் சிப்காட் விரிவாக்கப் பணிக்காக 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைதியான போராட்டத்தில் ஈடுபட்ட 7 விவசாயிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

ஏற்கனவே, பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகள் நீர், நிலம், காற்று என அனைத்தையும் மாசடையச் செய்து வருகிறது. குறிப்பாக வளர்ந்த நாடுகளில் தடை செய்யப்பட்ட தொழிற்சாலைகள், தமிழகத்தில் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கப்படுகின்றன.

அதன் விளைவாக, அப்பகுதிகளில் புற்றுநோய் போன்ற பாதிப்பு அதிகரித்து வருகிறது. இவற்றை முன்னிறுத்திதான், செய்யாறில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராடுகின்றனர். உலக அளவில் தடை செய்யப்பட்ட தொழிற்சாலைகள் தமிழகத்தில் தொடங்க, தமிழகம் என்ன குப்பைத் தொட்டியா?" என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: பாம்பன் புதிய ரயில் பாலம் எப்போது பயன்பாட்டிற்கு வரும்? - இந்திய ரயில்வே வாரிய உறுப்பினர் அப்டேட்!

தொடர்ந்து பேசிய அவர், "கடந்த அதிமுக ஆட்சியில் சிப்காட் விரிவாக்கப் பணிக்காக அரசாணை வெளியிட்டபோது, தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், தான் ஆட்சிக்கு வந்தால் இதைப் போன்ற நிலை ஏற்படாது என்று உத்தரவாதமும் அளித்திருந்தார்.

ஆனால், தற்போது அதையே இவர் செய்வது கண்டிக்கத்தக்கது. ஆட்சி மாறினாலும் இங்கு காட்சிகளில் மாற்றம் என்பது இல்லை. திமுக அரசு தங்களின் கூற்றிற்கு முற்றிலும் எதிராக செயல்படுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே, அரசு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை உடனடியாக கைவிடவேண்டும்" என்று கூறினார்.

மேலும், "விவசாயிகளின் அறியாமை, ஏழ்மையைப் பயன்படுத்தி, போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் சிலரை குண்டர் சட்டத்தில் கைது செய்து, காவல் துறையைப் பயன்படுத்தி, அப்பாவி விவசாய மக்களை அச்சுறுத்தி, விவசாய நிலத்தைக் கையகப்படுத்தி, அவற்றை கார்ப்பரேட்களுக்கு வழங்க இந்த அரசு தயாராகி விட்டது” என கூறினார்.

இதையும் படிங்க: கோவை முள் காட்டில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்.. கழுகு பார்வை காட்சிகள் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.