ETV Bharat / state

தமிழ்நாடு அரசு கரோனாவை மருத்துவ ரீதியாக அணுகவில்லை - ஆ.ராசா - erode district news

ஈரோடு : தமிழ்நாட்டில் கரோனாவை மருத்துவ ரீதியாக கட்டுப்படுத்த தவறியதால்தான் தொற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளது என நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

rasa mp
rasa mp
author img

By

Published : Jun 17, 2020, 7:10 PM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் பகுதியில், திமுக சார்பில் கரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொண்டு நிவாரணப் பொருள்களை வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், ”தமிழ்நாடு அரசு செய்ய வேண்டிய வேலையை எதிர்க்கட்சிகள் செய்து கொண்டிருக்கின்றன. அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட சொல்லியும் கேட்காமல், தான் தோன்றித்தனமாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு அரசு கரோனா பாதிப்பை மருத்துவ ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அணுகாமல் சிறுபிள்ளைத்தனமாக கையாண்டதால்தான் கரோனா பாதிப்பில் தமிழ்நாடு, இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை அமைச்சர், சுகாதாரத் துறை அலுவலர்கள், மாநகராட்சி நிர்வாகம் என ஆளுக்கொரு கணக்கு சொல்கின்றனர்" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: பொது ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த வேண்டும் - தலைமைச் செயலாளர் சண்முகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.