ETV Bharat / state

கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த மொடக்குறிச்சி எம்எல்ஏ! - Modakurichi mla

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சிப் பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் நிவாரணப்பொருள்களை வழங்கினார்.

Modakurichi mla
கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த மொடக்குறிச்சி எம்எல்ஏ
author img

By

Published : Nov 28, 2020, 3:54 PM IST

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடி, மொடக்குறிச்சி பகுதியில் நேற்று மாலை தொடங்கி இரவு முழுவதும் பெய்த மழையால் கொடுமுடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள அனைத்துக் குளங்கள், குட்டைகள் நிரம்பிவழிந்தன. கொடுமுடியிலுள்ள எஸ்.என்.பி. நகர் வடக்குத்தெரு, கொளத்துப்பாளையம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் 30-க்கும் மேற்பட்டோரை அரசு கொடுமுடியிலுள்ள அரசுப்பள்ளியில் மாவட்ட நிர்வாகம் தங்கவைத்துள்ளது. கனமழையின் காரணமாக பிரதான சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வேளாண் நிலத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் சாகுபடி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த மொடக்குறிச்சி எம்எல்ஏ

இந்நிலையில், மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் சிவசுப்பிரமணி, வருவாய்த் துறையினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ள நிவாரண முகாமிற்குச் சென்று ஆறுதல் கூறி நிவாரணப் பொருள்களை வழங்கினர்.

நேற்றிரவு பெய்த கனமழை கடந்த 40 ஆண்டுகளுக்குப் பிறகு பெய்த கனமழை எனக் கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைப் போர்க்கால அடிப்படையில் செய்துதர வேண்டும் என அரசுக்கு மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: குண்டும் குழியுமான சாலைகள் : நாற்று நட்டு பொதுமக்கள் நூதனப் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.