ETV Bharat / state

மொழிப்போர் தியாகிகள் நாளில் சுதந்திரப்போராட்ட வீரர்கள் குறித்து ஆவேச உரையாற்றிய அமைச்சர் - தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

ஈரோடு: மொழிப்போர் தியாகிகளுக்கும், சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசிய அமைச்சர் கருப்பண்ணனின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Minister's speech controversy
Minister's speech controversy
author img

By

Published : Jan 26, 2020, 4:50 PM IST

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி சலங்கைபாளைத்தில் அதிமுக கட்சியின் மாவட்ட மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

முதலில் பேசிய அமைச்சர் கருப்பண்ணன், தியாகிகள் வீரவணக்கப்பொதுக்கூட்டம் என்றவுடன் சுதந்திரப்போராட்டத் தியாகிகள் பொதுக்கூட்டம் என்று தனது பேச்சைத் தொடங்கினார். தியாகிகள் பல அடிகளை வாங்கிக்கொண்டு 'ஜெய்ஹிந்த்' என்று முழக்கமிட்டு சுதந்திரத்தை வாங்கி கொடுத்தார்கள் எனத் தெரிவித்தார். இதை கேட்டுக்கொண்டிருந்த அமைச்சர் செங்கோட்டையன் சற்று, குழப்பம் அடைந்து கருப்பண்ணனைப் பார்த்தார்.

இருப்பினும் விடாமல் தொடர்ந்து பேசிய அமைச்சர் கருப்பண்ணன், 'காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு நமக்கு இந்த சுதந்திரத்தைப் பெற்று கொடுத்துள்ளனர். அதனால் தான் இந்திய நல்ல நாடாகத் திகழ்வதாக' தெரிவித்தார்.

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் - அமைச்சர் பேச்சால் சர்ச்சை

மேலும் 'அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினர் பொறாமை கொள்ளாமல் நான், நீ என்று போட்டிபோடாமல் உங்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து போட்டியிட வையுங்கள். திமுக போல் வாரிசு அரசியல் அதிமுகவில் இல்லை' என்றும் தெரிவித்தார்.

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் விழாவுக்குச் சென்று, இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறித்து பேசிய அமைச்சர் கருப்பண்ணனின் பேச்சால் பொதுமக்கள் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் கடும் குழப்பத்திற்குள்ளாகினர்.

இதையும் படிங்க: ‘குடமுழுக்கென்றால் திராவிடம்... கும்பாபிஷேகமென்றால் ஆரியம்’ - வீரமணி பேச்சு

Intro:Body:tn_erd_01_sathy_amdk_minister_vis_tn10009

மொழிப்போர் தியாகிகளுக்கும் சுந்திரப்போராட்ட தியாகிகளுக்கும் வித்தியாம் தெரியாத பேசிய அமைச்சர் கருப்பணனின் சர்ச்சை பேச்சு: அமைச்சர் கருப்பணன்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி சலகைபாளையத்தில் அதிமுக மாணவரணி சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் சறுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர்கள் அதில் மொழிப்போர் தியாகிகளுக்கும் சுந்திரப்போராட்ட தியாகிகளுக்கும் வித்தியாம் தெரியாத பேசிய அமைச்சர் கருப்பணனின் சர்ச்சை பேச்சு…

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி சலங்கைபாளைத்தில் அதிமுக கட்சியின் மாவட்ட மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். முதலில் பேசிய அமைச்சர் கருப்பணன் தியாகிகள் வீரவணக்கப்பொதுக்கூட்டம் என்றவுடன் சுதந்திரப்போராட்ட தியாகிகள் பொதுக்கூட்டம் என்று தனது பேச்சை தொடங்கினார் தியாகிகள் பல அடிகளை வாங்கிக்கொண்டு ஜெய்ஹிந் என்று முழகமிட்டு சுந்திரத்தை வாங்கிகொடுத்தார்கள். காந்தி சுபாசந்திரபோஸ் போன்றவர்கள் மிகவும் க~;டப்பட்டு சுதந்திரத்தை பெற்றுகொடுத்துள்ளனர் என்றும் அதனால் தான் இந்திய நல்ல நாடாக திகழ்வதாக தெரிவித்தார். மேலும் அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் பொறமை கொள்ளமல் நான் நீ என்று போட்டிபோடாமல் உள்ளகளில் ஒருவரை தேர்தெடுத்து போட்டியிட வையுங்கள் என்றும் திமுக போல் வாரிசு அரசியல் அதிமுகவில் இல்லை என்றும் எம்.ஜி.ஆர் காலமுள்ளவரை முதல்வராக இருந்துள்ளார். ஜெயலலிதாவும் காலமுள்ளவரை முதல்வராக இருந்துள்ளார். அதுபோல் தற்போது எடப்பாடி பழனிச்சாமியும் காலமுள்ளவரை முதல்வராக இருப்பார் அதற்கு பிறகு யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆக முடியும் என்றும் தெரிவித்தார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.