ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிபாளையம் அருகேயுள்ள எலத்தூர் மற்றும் கடமசெட்டிபாளையம் பகுதிகளில் ரூ. 3.38 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட தார்ச்சாலைகளையும் குடிநீர் தொட்டிகளையும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அத்திக்கடவு, அவிநாசி திட்டப் பணி வரபாளையத்தில் 30 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட நீருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் சிக்கல் உள்ளது.
35 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதாத நிலையில் 718 பேர் மட்டும் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களுக்குத் தேர்வு வைத்த பின்னரே முடிவு வெளியிடப்படும். மீண்டும் பேருந்து இயங்கினால், மட்டுமே அவர்களுக்குத் தேர்வு வைக்க முடியும். கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்காக தனியார் பள்ளிகளுக்கு 248 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
பாடப் புத்தகங்கள் தற்போது பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு எவ்வாறு விநியோகம் செய்யலாம் என்று ஆலோசித்து முடிவெடுக்கப்படும். நிலைமைகள் சரியான பின்பே பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்படும். இந்தாண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக வாய்ப்புள்ளது" என்றார்.
இதையும் படிங்க: ஈரோட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு!