ETV Bharat / state

'குடியுரிமை திருத்த சட்டத்தில் முதல்வரின் முடிவே அதிமுகவின் முடிவு' - அமைச்சர் செங்கோட்டையன்!

ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பரப்புரையில் ஈடுபட்டார்.

senkotaiyan
அமைச்சர் செங்கோட்டையன்
author img

By

Published : Dec 22, 2019, 9:44 AM IST

Updated : Dec 22, 2019, 9:50 AM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட வெள்ளாங்கோயில், சிறுவலூர் , அயலூர் உட்பட 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் அதிமுக கட்சியின் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பரப்புரையில் ஈடுபட்டார். இந்த பரப்புரையின்போது, ஊராட்சிகளில் போட்டியிடும் தலைவர், வார்டு உறுப்பினர்கள் , ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மாவட்ட உறுப்பினர்கள் என அனைவருக்கும் அவரவர் சின்னங்களில் வாக்களிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பிரச்சாரம்

மேலும் பள்ளிக்குழந்தைகளிடம், அடுத்தாண்டு முதல் காலனிக்கு பதில் உங்களுக்கு ஷு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் போல் ஆங்கிலமும் கற்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. வரும் ஆண்டில் தனியார் பள்ளிக்குழந்தைகள் போல் அரசு பள்ளிக்குழந்தைகளும் பெற்றோர்களுடன் ஆங்கிலத்தில் பேசப்போகிறார்கள். ஆங்கில மோகத்தால்தான் பெற்றோர்கள் தங்களது வருவாய்களை இழந்து தனியார் பள்ளிகளில் படிக்க குழந்தைகளை அனுப்புவதாகவும், இனிமேல் அதுபோல் நடைபெறாது எனவும் கூறி வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்," 72 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட்போர்டு வைப்பதற்கும், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைப்பதற்குமான ஆணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதற்குள் ஆய்வு முடிந்துவிட்டதைப்போல் பேசுவது நியாயமாக இருக்காது. குடியுரிமை மாசேதாவிற்கு அதிமுக ஆதரவளித்தது முதலமைச்சரின் முடிவாகும். அதுதான் அதிமுகவின் முடிவும் என்றார்.

இதையும் படிங்க: தஞ்சையில் வளர்ந்துவரும் குதிரை சந்தை!

Intro:Body:tn_erd_04_sathy_kas_minister_vis_tn10009

கோபிசெட்டிபாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அண்ணா பல்கலைக்கழகம் பிரிப்பதற்கு குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதற்குள் பிரித்துவிட்டதாக கூறுவது நியாயம் அல்ல என்றும் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு அளித்தது முதல்வரின் முடிவு அதுவே அதிமுக கழகத்தின் முடிவாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்…

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட வெள்ளாங்கோயில் சிறுவலூர் அயலூர் உட்பட 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் அதிமுக கட்சியின் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டிடும் வேட்பாளைர்களை ஆதரித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது அந்தந்த ஊராட்சிகளில் போட்டிடும் தலைவர் வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிக்குழு உறுப்பினர்கள் மாவட்ட உறுப்பினர் என அனைவருக்கும் அவரவர்கள் சின்னங்களில் வாக்களிக்கவேண்டும் என்றும் தமிழக அரசு ஊராட்சிகளுக்கு பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை செய்துள்ளதாகவும் அது போல் ஊராட்சிகளில் மேன்மேலும் வளர்ச்சித்திட்டங்கள் நடைபெற வேண்டுமெனில் அதிமுக சார்பில் போட்டிடும் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் வாக்காளர்களிடம் எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார். மேலும் ஒவ்வொரு பகுதிக்கு அமைச்சர் செல்லும் போது அங்குள்ள பள்ளிக்குழந்தைகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை பார்க்க ஆர்வம் காட்டிவருவதுடன் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். அவர்களிடம் அமைச்சர் அடுத்தாண்டு முதல் காலனிக்கு பதில் உங்களுக்கு ஷ{ வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ் போல் ஆங்கிலமும் கற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதால் வரும் ஆண்டில் தனியார் பள்ளிக்குழந்தைகள் போல் அரசு பள்ளிக்குழந்தைகளும் பெற்றோர்களுடன் ஆங்கிலத்தில் பேசப்போகிறார்கள் என்றும் தமிழ் எவ்வாறு கற்றுத்தரப்படுகிறதோ அவ்வாறே ஆங்கிலமும் கற்றுத்தரப்படும் என்றும் ஆங்கில மோகத்தால் தான் பெற்றோர்கள் தங்களது வருவாய்களை இழந்து தனியார் பள்ளிகளில் படிக்க குழந்தைகளை அனுப்புவதாகவும் இனிமேல் அதுபோல் நடைபெறாது எனவும் கூறி வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் அண்ணா பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை முதல்வர் தெளிவாக உள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்ககுழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது அதற்குள் ஆய்வு முடிந்து விட்டதைப்போல் பேசுவது நியாயமாக இருக்காது. குடியுரிமை மாசேதாவிற்கு அதிமுக ஆதரவளித்தது முதலமைச்சரின் முடிவாகும் அதிமுக வின் முடிவும் அதுவே. அரசர் காலத்தில் நடைபெற்ற குடிமராமத்து திட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது அதில் ஏரி குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை நிறைவேற்ற நேற்றைய தினம் மத்திய அமைச்சரிடம் அதற்கான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் சிறந்த கல்வியை தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பானி வாய்க்கால் பாசனத்திற்கு கடலை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பேட்டி:
திரு.கே.ஏ.செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.

Conclusion:
Last Updated : Dec 22, 2019, 9:50 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.