ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பங்களாபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் புதிதாக அமைக்கப்பட்ட அலங்கார நுழைவு வாயில், ஸ்மார்ட் வகுப்பறை ஆகியவற்றை ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றியும் திறந்துவைத்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ”மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் கற்கவும் மாணவர்களுடன் ஆசிரியர்கள் கலந்துரையாடவும் வாரம் ஒரு நாள் வகுப்பு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் புதுமையான முயற்சியாகும். நீட் தேர்விற்கு 412 மையங்களில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
2021இல் அற்புதம் அதிசயம் நடக்கப்போவதாக ரஜினி கூறியது தற்போது முடிந்த இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு நடந்துள்ளது. விக்கிரவாண்டியில் 45 ஆயிரம் வாக்குகள் நான்குநேரியில் 38 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளோம்.” என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிதிலமடைந்த அரசுப்பள்ளி, சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை