ETV Bharat / state

'முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகம் மாற்றம்'

author img

By

Published : May 29, 2020, 7:46 PM IST

ஈரோடு: கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகம் இடம் மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

minister sengottaiyan press meet on
minister sengottaiyan press meet on

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் பகுதியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது, 'தேர்வுத்துறை இயக்குநரின் உதவியாளருக்கு உடல்நிலை சரியில்லை என்றவுடன் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகம் இடம் மாற்றப்பட்டுள்ளது. மேலும் தேர்வுத் துறை இயக்குநரகத்தில் உள்ளவர்களுக்கு கரோனா அறிகுறி உள்ளதா என மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

பத்தாம் வகுப்பு தேர்வுக்கும் இதற்கும் எந்த தடையும் இல்லை. தேர்வு குறிப்பிட்ட தேதியில் நடைபெறும். அரசுத்துறை, தனியார் பள்ளி விடுதிகள் அனைத்தும் தேர்வுக்கு மூன்று நாள்களுக்கு முன்பு திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தற்போது பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் உள்ள மாணவர்களை வெளியே கொண்டுவந்து தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான வாகன வசதியும் செய்யப்பட்டுள்ளது' என்று கூறினார்.

இதையும் படிங்க... கரோனாவை விரட்டும் ஆற்றல் மக்களிடம்தான் உள்ளது: அமைச்சர் செல்லூர் ராஜு!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.