ETV Bharat / state

'ஒவ்வொரு வகுப்பு முடிந்தவுடன் 10 நிமிடங்கள் மாணவர்கள் குடிநீர் அருந்த ஏற்பாடு' : அமைச்சர் செங்கோட்டையன்! - Local Election Option Petition at Erode

ஈரோடு: கோபிச்செட்டிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல், விருப்ப மனு விநியோக நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் ஆகியோர் விருப்ப மனுக்களை விநியோகித்து வாழ்த்து தெரிவித்தனர்.

உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனு விநியோக நிகழ்ச்சி
author img

By

Published : Nov 15, 2019, 9:04 PM IST

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக கட்சியின் சார்பில் உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் ஆகியோர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள அதிமுக கட்சித் தொண்டர்களுக்கு விருப்ப மனுக்களை வழங்கி தொடங்கி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட கோபிச்செட்டிபாளையம், அந்தியூர், பவானி, சத்தியமங்கலம், நம்பியூர், தாளவாடி ஆகிய மாவட்டங்களிலிருந்து ஏராளமான தொண்டர்கள் விருப்ப மனுக்களைப் பெற்று வருகின்றனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறுகையில், "உலக சாதனையில் இடம்பெறும் வகையில், பத்து லட்சம் மாணவர்கள் ஒரே இடத்தில் நெகிழி ஒழிப்பது குறித்து ஒன்றிணைந்து உறுதிமொழிகள் ஏற்றனர். மாணவர்களின் நலனுக்காக ஒவ்வொரு வகுப்பு முடிந்தவுடனும், 10 நிமிடங்கள் குடிநீர் அருந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்துவதற்கு நேற்று முதலமைச்சரின் உத்தரவின்படி அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனு விநியோக நிகழ்ச்சி

மேலும், விளையாட்டுக்காக வாரத்தில் ஒரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல், மாணவர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்காக யோகா பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக விளையாட்டை ஊக்கப்படுத்துவதற்காக ரூ.76 கோடியே 32 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் வரும் டிசம்பர் இறுதிக்குள் ஊராட்சி மன்றங்கள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

Intro:tn_erd_05_sathy_school_water_vis_tn10009

ஒவ்வொரு வகுப்பு முடிந்தவுடன் 10 நிமிடங்கள் குடிநீர் அருந்த ஏற்பாடு : அமைச்சர் செங்கோட்டையன்Body:ஒவ்வொரு வகுப்பு முடிந்தவுடன் 10 நிமிடங்கள் குடிநீர் அருந்த ஏற்பாடு : அமைச்சர் செங்கோட்டையன்

கோபிசெட்டிபாளையம் தனியார் திருமணமண்டபத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் விருப்பமனு விநியோக நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் விருப்ப மனுக்களை விநியோகித்து வாழ்த்து தெரிவித்தனர்…
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் தனியார் திருமணமண்டபத்தில் அதிமுக கட்சியின் சார்பில் உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டைன் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பமுள்ள அதிமுக கட்சி தொண்டர்களுக்கு விருப்ப மனுக்களை வழங்கி தொடங்கிவைத்தனர். ஈரோடு புறநகர் அதிமுக கழகத்தின் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கோபிசெட்டிபாளையம் அந்தியூர் பவானி சத்தியமங்கலம் நம்பியூர் மற்றும் தாளவாடி ஆகிய மாவட்டங்களிலிருந்து ஏராளமான தொண்டர்கள் விருப்ப மனுக்களை பெற்றுவருகின்றனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று குழந்தைகள் தினவிழவில் பல்வேறு திட்டங்கள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பத்து லட்சம் மாணவர்கள் ஒரே இடத்தில் நெகிழி ஒழிப்பது குறித்து ஒன்றிணைந்து உறுதிமொழிகள் ஏற்றனர். இந்நிகழ்வு உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்ததை மனதில் கொண்டு ஒவ்வொரு வகுப்பு முடிந்தவுடன் 10 நிமிடங்கள் குடிநீர் அருந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீட்டிலிருந்தும் குடிநீர் எடுத்துவரலாம் மாணவர்கள் உடல் ஆரோக்கியம் பெற இவ்வாறு நேற்றை தினம் முதல்வரால் ஆணை பிரப்பிக்கப்பட்டுள்ளது. வகுப்பு முடிந்து அடுத்த ஆசிரியர் வருவதற்கு 10 நிமிடங்கள் ஆகும் அந்த இடைவெளியில் தண்ணீர் அருந்த பயன்படுத்திக்கொள்ளலாம் அதனால் காலவிரையம் ஏற்படவாய்பில்லை. இது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்த நேற்று அரசாணை வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டுக்கு என வாரத்தில் ஒரு நாள் முறைப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் யோகா பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விளையாட்டை ஊக்கப்படுத்துவதற்காக இந்தியாவிலேயே முதல்முறையாக ரூ.76 கோடியே 32 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஊராட்சி மன்றங்கள் மற்றும் பேரூராட்சிகளில் விளையாட்டு மேம்பாட்டு திட்டம் டிசம்பர் மாத இறுதிக்குள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்..
பேட்டி:
கே.ஏ.செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சா
Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.