ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் விழாவுக்கு பவானிசாகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு 105 பேருக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 'ஈரோடு மாவட்டத்தில் 64 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று நான்கு பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கரோனா இல்லாத மாவட்டமாக ஈரோடு திகழ்கிறது. இதற்குக் காரணம் முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படி அலுவலர்கள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டது தான். தற்போது பொதுத்தேர்வுக்கு மொழிப் பாடத்தைத் தவிர, பிற பாடங்களுக்கு தேர்வு நடத்தும் திட்டமும் கிடையாது. பல்கலைக்கழக மானியக் குழு செப்டம்பரில் கல்லூரி திறக்கலாம் என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதுபோல பள்ளிகளும் திறக்க கால தாமதம் ஏற்படுமா என்பது குறித்து முதலமைச்சரே தீர்மானிப்பார்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க... ‘கரோனா போல் செயல்படும் அமைச்சர்’ - எம்.எல்.ஏ பேச்சால் பேரவையில் சிரிப்பலை!