ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் அருகேயுள்ள வெள்ளபெத்தாம்பாளையம் பகுதியில் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தீரன் மு.சின்னச்சாமி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது நினைவு மண்டபத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, கே.சி.கருப்பணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்குப் பிறகு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அவர் கூறுகையில், தமிழக அரசும் அதிமுக இயக்கமும் தேசியத் தலைவர்கள், நாட்டுக்காக உழைத்த தியாகிகளுக்கு கட்சி பேதமின்றி மரியாதை செலுத்தி வருவதாகவும், அவர்களுக்கு நினைவு மண்டபங்கள், மணி மண்டபங்களையும் அதிமுக அரசு கட்டி வருவதாகவும், தொடர்ந்து மரியாதை செலுத்தும் என்றார்.
இதேபோல் அனைத்து கட்சியினர் சார்பில் நினைவு இடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.