ETV Bharat / state

மாவீரன் பொல்லானுக்கு ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் - அமைச்சர் சு.முத்துசாமி தகவல் - worth 2 crores 60 lakhs for Maveeran Pollan

சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானுக்கு ஓராண்டுக்குள், ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 28, 2022, 5:24 PM IST

மாவீரன் பொல்லானுக்கு 2.60 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் - அமைச்சர் சு.முத்துசாமி தகவல்

ஈரோடு: சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானின் 254ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, மதிவேந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணேசமூர்த்தி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் பொல்லானின் உருவப்படத்திற்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தினர்.

ரூ.2.60 கோடியில் மணிமண்டபம்: பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சு.முத்துசாமி, 'ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர்களின் நடவடிக்கையை கண்காணித்து தீரன் சின்னமலையோடு (Dheeran Chinnamalai) இணைந்து போரிட்டு வெற்றி பெற்ற மாவீரன் பொல்லானுக்கு (Maaveeran Pollan) மரியாதை செய்திடும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மணிமண்டபம் அமைக்க உத்தரவிட்டதன்பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனைத்து மக்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்க வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் அரச்சலூர் அருகே ஜெயராமபுரத்தில் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மணிமண்டபமும் அவரது சிலையும் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறினார். அடுத்த ஓராண்டிற்குள் இந்தப் பணிகள் முடிக்கப்படும்' என்றார்.

இதையும் படிங்க: களைக்கட்டிய முனியப்பன் கோயில் திருவிழா.. ஆயிரக்கணக்கான ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.