ETV Bharat / state

கூடுதல் விலைக்கு மது விற்றால் கடும் நடவடிக்கை; அமைச்சர் முத்துசாமி வார்னிங்!

author img

By

Published : Jul 3, 2023, 7:31 AM IST

டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

erode
ஈரோடு
டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரிக்கை

ஈரோடு: பவானிசாகர் பேரூராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.12.16 கோடி செலவில் புதிய குடிநீர் திட்ட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் கலந்துகொண்டு பணியினை தொடங்கி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “பவானி ஆற்றில் கழிவு நீர் கலப்பது குறித்த மனு வந்துள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.

பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் நன்செய் பாசனத்திற்கு குறித்த காலத்தில் தண்ணீர் திறக்கப்படும். மேலும் ஆக.15 ஆம் தேதி தண்ணீர் திறக்க அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து கொண்டுதான் இருக்கிறோம். கீழ்பவானி வாய்க்கால் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக இரு சாராரிடம் பேசி வருகிறோம்.

இதையும் படிங்க: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பட்டயப்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு!

முக்கியமாக யார் வேண்டாம் என கூறுகின்றனரோ அவர்களை சமாதானப் படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இருந்தாலும் எல்லோருடைய ஒப்புதலை பெற்று செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். மேலும் பழைய கட்டுமானங்கள் அனைத்தையும் புதிதாக செய்ய எந்த கட்டுப்பாடும் இல்லை.

சமீபத்தில் அரசு மதுபானக் கடைகளில் பாட்டிலுக்கு மேல் 10 ரூபாய் அதிகமாக விற்பனை செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற கேள்விக்கு, டாஸ்மாக் மதுபானங்கள் சில இடங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வருகிறது.

அந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். உரிய அதிகாரிகள் இது போன்ற புகார்களில் நேரடியாக சென்று நடவடிக்கை எடுக்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் எங்கிருந்து புகார் வந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்போர் மீது நடவடிக்கை கடும் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழக ஆளுநர் தன்னுடைய உரிமையை மீறி செயல்படுகிறார். ஆளுநருக்கு என ஒரு வரைமுறை உள்ளது. அரசாங்கத்திலிருந்து ஆளுநருக்கு ஒரு கோப்பு அனுப்பப்பட்டால் ஒரு முறை திருப்பி அனுப்பலாம். இரண்டாவது முறை அனுப்பும்போது ஆளுநர் அப்ரூவ் செய்தாக வேண்டும். சட்டத்திற்கு உட்பட்டு தான் அரசாங்கம் எதையும் செய்கிறது. சட்டத்தை மீறி செய்வதில்லை. ஆளுநர் சில கேள்விகளை கேட்கிறார். அவரின் கேள்விகளுக்கு அரசு மூலம் சரியான பதில் கொடுக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தீட்சிதர்கள் தாக்கியதாக அவதூறாக பதிவு:பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யாவிற்கு சம்மன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.