ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் 24 மணி நேரமும் செயல்படும் வார் ரூம் ( war room) வசதியை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "ஈரோடு மாவட்டம் முழுவதும் 100 வீட்டுக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்படும்.
மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் 100 வீட்டுக்கு ஒரு பொறுப்பாளர் வீதம் 450 குழு அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவில் அங்கன்வாடி ஊழியர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், தன்னார்வலர்கள் உள்ளனர்.
இரண்டு நாட்களில் ரெம்டெசிவிர், ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கப்டும்" என்றார்.
இதையும் படிங்க: பெருந்தொற்று காலத்தில் சிறைக் கைதிகளின் நிலை என்ன?