ETV Bharat / state

அமலாக்கத்துறையின் சோதனை என்பது பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை - அமைச்சர் முத்துசாமி - அமைச்சர் பொன்முடி

'21 வயதிற்குக் கீழே மதுபானக் கடைகளுக்கு வருபவர்களை அன்பாக அழைத்து அறிவுரை வழங்கி மதுவால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்' என அமைச்சர் முத்துசாமி கூறினார். மேலும் அவர் அமலாக்கத்துறையின் சோதனை என்பது பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கையாகத் தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 17, 2023, 5:41 PM IST

மதுபான கடைக்கு 21 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வந்தால் அன்பாக அறிவுரை வழங்க உத்தரவிட்டுள்ளோம்

ஈரோடு: சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானின் 218வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மது விலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி மலர்த் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துசாமி, 'பொல்லானுக்கு விரைவில் நினைவு மண்டபம் அமைக்கும் பணி தொடங்கப்படும். அரசு மதுக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வாங்கியவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அரசு மதுபானக் கடையின் நேரத்தை மாற்றும் எண்ணம் இல்லை. பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும். கடை இல்லாத நேரத்தில் வேறு இடத்திற்கு செல்லக்கூடாது. காலையில் மது விற்பனை செய்வது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. டெட்ரா பாக்கெட் குறித்து முடிவுகள் எடுக்கப்படவில்லை. ஒவ்வொரு சேல்ஸ்மேன் மற்றும் சூப்பர்வைசருக்கு இளைஞர்கள் வந்தால் தகவல் கொடுக்கவும். இளைஞர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது‌.

மதுவால் ஏற்படும் பாதிப்பு குறித்த வேன் விழிப்புணர்வு பிரசாரத்திற்கு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுவால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம். 21 வயதிற்குக் கீழே மதுபானக் கடைகளுக்கு வருபவர்களை அன்பாக அழைத்து அறிவுரை வழங்கி, மதுவால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

இதையும் படிங்க: காட்டு முயல் வேட்டை: ஒரே இடத்தில் சிக்கிய 107 பேர்.. ஈரோட்டில் நடந்தது என்ன?

டெட்ரா பாக்கெட்டில் மது விற்பது கர்நாடகாவில் இருப்பதால் ஆலோசித்தோம். டெட்ரா பாக்கெட் ஆய்வில் தான் உள்ளது‌. மதுவால் பாதிக்கப்பட்டோர் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் 15 இடங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி ஆகியோருக்குத் தொடர்புடைய பல இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சர் பொன்முடி வீடு, விழுப்புரத்தில் உள்ள எம்.பி. கௌதம சிகாமணி வீடு உட்பட அவர்களுக்கு தொடர்புடைய ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் சி.ஆர்.பி.எப். அதிகாரிகள் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, ''பொன்முடி என்ன தவறு செய்தார். அவர் மீதான குற்றச்சாட்டு என்ன?. அமலாக்கத்துறையின் சோதனை பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கையாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்'' ‌என்று கூறினார்.

இதையும் படிங்க: ஸ்பாட் டெக்னாலஜி மூலமாக பால் கொள்முதல் அதிகரித்து உள்ளது: அமைச்சர் மனோ தங்கராஜ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.