ஈரோடு: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அறிவிக்கப்பட்ட நாட்களில் இருந்து பல எதிர் விமர்சனங்கள் வந்த கொண்டே தான் உள்ளன. இந்நிலையில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் திமுக அறிவித்த மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கும் மது பானங்கள் விலை உயர்வுக்கும் சம்பந்தம் உள்ளது எனத் தெரிவித்திருந்தார். இதற்கு அமைச்சர் முத்துசாமி பதிலளித்தார்.
ஈரோட்டில் அரசு தலைமை மருத்துவமனையில் வளர்ச்சிப் பணிகள் குறித்து மதுவிலக்கு, ஆயத்தீர்வை மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில், மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் உடன் இன்று (ஜூலை 26) ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துசாமி பேசுகையில், ''அண்ணாமலையின் திமுக சொத்து பட்டியல் ரீலிஸ்: இன்று மாலை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆளுநரை சந்தித்து திமுகவினரின் சொத்துப் பட்டியல் வழங்குவது தொடர்பான கேள்விக்கு அவர் ''அவரது வேலையை செய்கிறார். நாங்கள் எங்களது வேலையை செய்கிறோம். அவர் செய்யும் வேலை எல்லாம் நாங்கள் பார்த்து கொண்டு இருந்தால் எங்களது வேலை கெட்டு விடும்'' என்றார்.
இதையும் படிங்க: இன்று மாலை ஆளுநரைச் சந்திக்கிறார் அண்ணாமலை.. 'திமுக பைல்ஸ்-2' விவகாரம் என தகவல்!
மதுபானம் விலை உயர்வே காரணம்: மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கும் மதுபானங்கள் விலை ஏற்றத்திற்கு எந்த விதமான சம்பந்தமும் இல்லை. எல்லா மதுபானங்களுக்கும் விலை உயர்த்தப்படவில்லை என்று குறிப்பிட்டார். பின்னர், அத்திக்கடவு அவிநாசி திட்டம் விரைவில் முடிக்கப்படும் எனவும் இன்னும் ஒரு வாரத்திற்குள் அதற்கான தேதி முதலமைச்சரிடம் பேசி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.
திடீர் ஆய்வு: அமைச்சரின் இந்த திடீர் ஆய்வு தகவல் அறிந்த ஈரோடு தலைமை மருத்துவமனை அதிகாரிகள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய பெயர் பலகையை அப்புறப்படுத்தியதுடன், அங்கு இருந்த பெருச்சாளிகளை, ஊழியர்களை கொண்டு அவசர அவசரமாக துரத்தினர்.
மேலும் பொதுமக்கள் கைகளை சுத்தம் செய்யும் இடம் அதிக துர்நாற்றம் வீசுவதால், அதனையும் சுத்தம் செய்த ஊழியர்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள குப்பைகளையும் அப்பறப்படுத்தினர். இதனை வேடிக்கை பார்த்த பொதுமக்கள், இதே போன்று தினசரி மருத்துவமனை வளாகத்தைச் சுத்தம் செய்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தனர்.
மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கும் மது பானங்கள் விலை ஏற்றத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும்; ஈரோட்டில் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துச்சாமி பேட்டி அளித்ததுடன், அமைச்சரின் திடீர் ஆய்வால் மருத்துவமனையை அவசர அவசரமாக சுத்தம் செய்த ஊழியர்களை கண்ட பொதுமக்கள் யாரேனும் வந்தால் தான் மருத்துவமனை சுத்தம் செய்யப்படுகிறது எனக் கூறி அதிருப்தியடைந்தனர்.
இதையும் படிங்க: பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா... கேள்வி கேட்ட நபரை ஆபாச வார்த்தையால் திட்டிய ஊழியர்!