ETV Bharat / state

கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் மாவட்ட ஆட்சியருடன் அமைச்சர் முத்துசாமி ஆய்வு! - ஈடிவி செய்திகள்

சத்தியமங்கலம் கரோனா சிறப்பு சிசிச்சை மையத்தில் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் கதிரவருடன் அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார்.

கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் மாவட்ட ஆட்சியருடன் அமைச்சர் முத்துச்சாமி ஆய்வு!

author img

By

Published : May 14, 2021, 3:21 PM IST

ஈரோடு: கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கரோனா நோய்த் தாக்குதலுக்கு உள்ளானோர் சிகிச்சைப் பெற சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் போதிய இடம் கிடைக்கவில்லை. மருத்துவமனைப் பற்றாக்குறையால் பெருந்துறை அரசு மருத்துவமனை மற்றும் கோபி பகுதிகளுக்கு நோயாளிகள் அனுப்பப்படுகின்றனர்.

இதையடுத்து, அத்தாணி சாலையில் செயல்பட்ட தனியார் பள்ளி, தற்போது கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது. அங்கு 80 படுக்கைகளுடன் கூடிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு நோயாளிகள் அனுமதிக்கபட்டுள்ளனர். அங்கு உள்ள அடிப்படை வசதிகளை அமைச்சர் முத்துசாமி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆகியோர் பார்வையிட்டனர்.

மேலும் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள இடங்களில் கரோனா சிகிச்சை சிறப்பு மையம் அமைப்பதற்கு அமைச்சர் முத்துசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கான வரைபடத்தைத் தயார் செய்து, சில நாள்களில் கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கு மாவட்ட ஆட்சியருக்கு அறிவுரை வழங்கினார்.

இதையும் படிங்கள்: முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.