நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து அரசூர், உடையார்பாளையம், உக்கரம் ஆகிய இடங்களில் தமிழ்நாடுசுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பரப்புரை மேற்கொண்டார். எருமைகாரன்பாளையத்தில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, மத்தியில் ஆளும் மோடியின் அரசு மக்களவைத் தொகுதியில் அதிமுகவோடு கூட்டு சேர வேண்டும் என விரும்பி, நீங்கள் கொடுப்பதை கொடுங்கள் என சீட் கேட்டனர். அதேபோல பாமக, தேமுதிக, தமாக ஆகியோரும் அதிமுக கூட்டணியில் சேர வேண்டும் என்றே இணைந்தனர்.
மத்தியில் மோடி அரசு சிறப்பாக செயல்படுகிறது. பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் நமக்கு இடையூறாக இருக்கின்றன. புல்மாவா தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து, பயங்கரவாதிகளை பழிவாங்குவதற்காக பதினைந்தே நிமிடத்தில் பாகிஸ்தானிலுள்ள அவர்களின் முகாமை அழித்து 4 ஆயிரம் பேரை கொன்றது மோடியின் திறமை.
அதே நேரத்தில் பைலட் விஜய் ஆனந்தை பாராட்டுகிறோம் எனக் கூறினார். இதனிடையே அமைச்சர் அருகிலிருந்தவர்கள் அவர் அபிநந்தன் என கூறியதை கேட்டு பிறகு அபிநந்தன் என கருப்பணன் திருத்திக்கொண்டார்.