ETV Bharat / state

சசிகலா வருகை: கையெடுத்து கும்பிட்ட அமைச்சர் - latest erode district news in tamil

கோபி செட்டிபாளையத்தில் சசிகலா குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஆள விடுங்கடா சாமிகளா என்பதுபோல் கையெடுத்து அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கும்பிட்டது அங்கு சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.

minister sengottaiyan
சசிகலா வருகை குறித்த கேள்வி கையெடுத்து கும்பிட்ட அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
author img

By

Published : Feb 1, 2021, 5:10 PM IST

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ஒடையாக்கவுண்டன்புதூரில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ. 38.17 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் 384 வீடுகள் கட்டப்படும் கட்டடப் பணியை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று தொடங்கி வைத்தார்.

minister sengottaiyan

பின்னர் நிகழ்வில் பேசுகையில், " சாலை பணிகளைக் காட்டிலும் மக்கள் குடியிருப்பு முக்கியம் என்ற நிலையில் இந்த இடம் எடுக்கப்பட்டுள்ளது. இன்று குடிசையில் வாழ்ந்து வரும் மக்கள் மாடி வீட்டில் குடியேற வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாத காலத்திற்குள் 5 ஆயிரம் பேருக்கு சொந்த வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கொடிவேரி அணையில் செயற்கை கடற்கரை உருவாக்கப்படவுள்ளது" என்றார்.

Minister KA Shenkotayan reaction make laugh on the question of Sasikala
குடியிருப்பு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "பள்ளி திறப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார். 11ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கல்வியாளர்களின் கருத்து கேட்கப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்றார்.

மேலும், ஆசிரியர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, முன்கள பணியாளர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என பதிலளித்தார்.

தொடர்நது சசிகலா குறித்த கேள்விக்கு, ஆளா விடுங்கடா சாமி என்கிற முறையில் செய்தியாளர்களை நோக்கி அமைச்சர் கையெடுத்து கும்பிட்டது அங்கு சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: அதிமுக தேர்தல் அறிக்கையில் திமுகவிற்கு பெரிய ஆப்பு - அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.