ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் பங்கேற்றார். கவுந்தப்பாடி பகுதிக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அய்யம்பாளையம் மேல்நிலைப்பள்ளி உட்பட நான்கு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 603 மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி அமைச்சர் சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ”மீத்தேன் திட்டத்தை மாநிலங்களில் செயல்படுத்த மாநில அரசிடம், மத்திய அரசு அனுமதி கேட்காவிட்டாலும், சுற்றுச்சூழல் துறை கீழ் உள்ள சி.ஆர். கமிட்டியில் அனுமதி வாங்கித்தான் ஆக வேண்டும். 500 டிடிஎஸ் மேல் இருக்கும் நீரைச் சுத்திகரிப்பு செய்யதான் ஈரோடு பவானி நகரங்களில் பொதுச் சுத்திகரிப்பு மையம் கொண்டு வரப்படுகிறது” என்றார்.
இதையும் படிங்க...பள்ளியில் விவசாயம் செய்யும் மாணவர்கள்; குவியும் பாராட்டுகள்!