ETV Bharat / state

10ஆம் வகுப்பு வரை மட்டும் படித்த போலி டாக்டர் - கிளினிக்கில் சோதனை செய்த அலுவலர்கள்! - கோபிசெட்டிபாளையம்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொளப்பலூரில் 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து வந்த துரைராஜ் என்பவரது கிளினிக்கில் சுகாதாரத்துறை மற்றும் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

கிளினிக்கில் சோதனை செய்த அதிகாரிகள்
கிளினிக்கில் சோதனை செய்த அதிகாரிகள்
author img

By

Published : Jun 4, 2022, 6:32 PM IST

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொளப்பலூரைச் சேர்ந்தவர் துரைராஜ். 75 வயதான இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அதே பகுதியில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள துரைராஜ், ஆயுர்வேத சிகிச்சை அளிப்பதாக கூறிக்கொண்டு பல ஆண்டுகளாக ஆங்கில முறைப்படி சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

இந்நிலையில் துரைராஜ், மருத்துவ படிப்பு படிக்காத நிலையில், ஆங்கில மருத்துவ முறைப்படி சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது. அதைத்தொடர்ந்து அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் அப்புராஜ், அயலூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தலைமையில் சுகாதாரத்துறை மற்றும் காவல் துறையினர் துரைராஜ் கிளினிக்கில் திடீர் சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையில் காலி மருந்து குப்பிகள், பயன்படுத்தப்பட்ட ஊசி, ரத்த அழுத்தம் பார்க்கும் கருவி மட்டுமே கிடைத்துள்ள நிலையில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். துரைராஜ் மீது கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் போலி மருத்துவர் என புகார் எழுந்ததை தொடர்ந்து, அப்போது கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் புகார் வந்ததை அடுத்து சோதனை நடைபெற்றது.

சுகாதாரத் துறையினர் நடத்திய விசாரணையில் துரைராஜ் 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள நிலையில் ஆயுர்வேத சிகிச்சை அளிப்பதாக கூறிக்கொண்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்துள்ளது தெரியவந்தது. கிளினிக்கில் ஆங்கில மருந்து பாட்டில்கள், ஊசி எதுவும் கிடைக்காத நிலையில் காலி மருந்து பாட்டில்களை மட்டும் சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கிளினிக்கில் சோதனை செய்த அலுவலர்கள்

அதைத்தொடர்ந்து துரைராஜ், ஆயுர்வேத சிகிச்சை அளிக்க உரிய கல்வி கற்றுள்ளாரா என்பது குறித்து விசாரணைக்கு பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: "இத கேக்க நீ யாரு..?" Swiggy ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.