ETV Bharat / state

வெள்ளநீர் ஊருக்குள் புகுவதைத் தடுக்க கீரிப்பள்ளம் ஓடையில் பராமரிப்புப் பணி: செங்கோட்டையன் ஆய்வு

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் மையப்பகுதியில் உள்ள கீரிப்பள்ளம் ஓடையில் நடைபெற்றுவரும் பராமரிப்புப் பணிகள் குறித்து முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன் நேரில் சென்று ஆய்வுசெய்து பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களை அறிவுறுத்தினார்.

வெள்ளநீர் ஊருக்குள் புகுவதை தடுப்பதற்கு கீரிப்பள்ளம் ஓடையில் பராமரிப்பு பணி

author img

By

Published : Jun 17, 2021, 9:53 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள கீரிப்பள்ளம் ஓடையில் மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கினால் மொடச்சூர், சாமிநாதபுரம் பேருந்து நிலையம், சீதாலட்சுமிபுரம், நஞ்ச கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து சேதப்படுத்திவருவதாகவும் இந்த ஓடையைத் தூர்வாரி கரைகளைப் பலப்படுத்த அப்பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கைவைத்திருந்தனர்.

கோபிசெட்டிபாளையம் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆட்சியில் சுமார் 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கீரிப்பள்ளம் ஓடையைத் தூர்வார நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சுவாமிநாதபுரத்திலிருந்து கோபிசெட்டிபாளையத்தின் மையப்பகுதி வழியாக பாரியூர் தடப்பள்ளி கிளை வாய்க்கால் வரை சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு கரைகளைப் பலப்படுத்தி தூர்வாரப்பட்டு இருபுறமும் நடைபாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

கீரிப்பள்ளம் ஓடையில் நடைபெற்றுவரும் இந்தப் பராமரிப்புப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ. செங்கோட்டையன் நேரில் சென்று ஆய்வுசெய்தார்.

தொடர்ந்து கோடைகாலம் முடிந்து மழைக்காலம் வரும் முன் இந்தத் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுடன் ஆலோசனைமேற்கொண்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.