ETV Bharat / state

'இயந்திர நாற்று நடவு முறையால் மகசூல் அதிகரிக்கும்' - வேளாண்மை துணை இயக்குநர்

author img

By

Published : Sep 15, 2019, 8:47 AM IST

ஈரோடு: இயந்திர ஒற்றை நாற்று நடவு முறையால் மகசூல் அதிகரிக்கும் என ஈரோடு மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

mechanized paddy cultivation in Gobichettipalayam

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையிலிருந்து கடந்த மாதம் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்களுக்கு முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனால் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் ஆகிய மூன்று பாசன வாய்க்கால்கள் மூலம் சுமார் 40 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் நேரடி பாசனம் பெறுகின்றன.

இந்நிலையில், நெல் நடவு பணிகளுக்கு கூலியாட்கள் பற்றாக்குறை, கால விரயம் ஆகியவற்றை மனதில் கொண்டு பல விவசாயிகள், இயந்திர நெல் நடவு முறையில் ஒற்றை நாற்று நடவிற்கு திரும்பியுள்ளனர்.

இயந்திய நாற்று நடும் பணி

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "ஏக்கர் ஒன்றுக்கு 10 கிலோவரை விதை நெல் மிகுதியாக கிடைக்கும். அறுவடையை முன்னமே செய்யமுடியும். ஒற்றை நாற்று நடவுமுறையைப் பயன்படுத்தும்போது களை எடுப்பதற்கும் இயந்திரத்தையே பயன்படுத்தலாம். இயந்திரம் மூலம் அறுவடை மேற்கொள்வது வசதியாக உள்ளது" என்றனர்.

இந்நிலையில், கோபிசெட்டிபாளையம் கருங்கரடு பகுதியில் நேற்று நடைபெறும் இயந்திர நெல் நடவுப்பணியை, ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் பிரேமலதா நாற்று எடுத்துக்கொடுத்து தொடங்கிவைத்தார்.

பின்னர் இந்திய நாற்றுநடவு குறித்து பேசிய அவர், "இயந்திர ஒற்றை நாற்று நடவு முறையால் மகசூல் அதிகரிக்கும். கூலியாட்கள் பற்றாக்குறையைப் போக்கமுடியும். விதைநெல்லும் குறைந்தளவே போதுமானது. நாற்று நடலுக்கு குறைந்த நாட்களே போதுமானது.

ஈரோடு மாவட்டத்தில் இயந்திர நெல் நடவிற்கு இந்தாண்டு 800 ஹெக்டேர் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோபிசெட்டிபாளையம் பகுதியில் 200 ஹெக்டேர் நிலங்களில் இயந்திர நெல் நடவுப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது" எனத் தெரிவித்தார்.

இந்த இயந்திர நெல் நடவுப்பணி தொடக்கத்திற்கு, கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள், ஜெகேகே வேளாண்மை கல்லூரி மாணவிகள், குமரகுரு வேளாண்மை கல்லூரி மாணவிகள் என 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று நாற்றுகளை இயந்திரங்களுக்கு எடுத்துக்கொடுத்தும், உரங்கள் தூவியும் விவசாயிகளுக்கு உறுதுணை புரிந்ததுடன் இயந்திர நெல் நடவுமுறை குறித்து களப்பணியில் ஈடுபட்டு நெல் நடவுப் பணியை கற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வின்போது கோபிசெட்டிபாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஜீவதயாளன் வட்டார தொழில்நுட்ப மேலாளர் அரவிந்தன், ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Intro:Body:tn_erd_01_sathy_paddy_tranplant_vis_tn10009

கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள வயல்களில் இயந்திர நெல் நடவுப்பணிகள் தீவரம் அடைந்துள்ளது. இந்தாண்டு ஈரோடு மாவட்டத்தில் இயந்திர நெல் நடவிற்கு 800 ஹெக்டேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை இணை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பiணியிலிருந்து கடந்த மாதம் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்களுக்கு முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் தடப்பள்ளி அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் ஆகிய மூன்று பாசன வாய்கால்கள் மூலம் சுமார் 40 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் நேரடி பாசனம் பெறுகிறது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது முதல் நெல் நடவுப்பணிக்கு விவசாயிகள் ஆயத்தம் ஆயினர். இந்நிலையில் கூலியாட்கள் பற்றாக்குறை கால விரையம் ஆகியற்றை மனதில் கொண்டு பல விவசாயிகள் இயந்திர நெல் நடவு முறையில் ஒற்றை நாற்று நடவிற்கு திரும்பியுள்ளனர். திருந்திய நெல் சாகுபடி முறையில் இந்திர நெல் நடவிற்கு இந்திரத்திலேயே நாற்றல்கால் அமைந்து நெல் விதைத்தனர். இதனால் ஏக்கர் ஒன்றுக்கு 10 கிலோ வரை விதை நெல் மிகுதியாவதாகவும் நாற்றிக்கு 12 முதல் 16 நாட்களில் நடவிற்கு கொண்டு செல்வதால் அறுவடையை முன்னமே செய்யமுடியும் எனவும் இயந்திர ஒற்றை நாற்று நடவுமுறையை பயன்படுத்தும் போது களை எடுப்பதற்கும் இயந்திரத்தையே பயன்படுத்தலாம் எனவும் அதேபோல் அறுவடைக்கும் இயந்திரமுறையில் அறுவடையை மேற்கொள்ள வசதியாக உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கோபிசெட்டிபாளையம் கருங்கரடு பகுதியில் நடைபெறும் இயந்திர நெல் நடவுப்பணியை ஈரோடுமாவட்ட துணை இயக்குநர் பிரேமலதா நாற்று எடுத்துக்கொடுத்து தொடங்கிவைத்தார். இயந்திர நெல் ஒற்றை நாற்று நடவு முறையால் மகசூல் அதிகரிக்கும் கூலியாட்கள் பற்றாக்குறையை போக்கமுடியும் விதைநெல்லும் குறைந்தளவே போதுமானது குறைந்த நாட்களே போதுமானது என்றும் ஈரோடு மாவட்டத்தில் இயந்திர நெல் நடவிற்கு இந்தாண்டு 800 ஹெக்டேர் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் கோபிசெட்டிபாளையம் பகுதியில் 200 ஹெக்டேர் நிலங்கள் இயந்திர நெல் நடவுப்பணி மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ஈரோடு வேளாண்மை துணை இயக்குநர் பிரேமலதா தெரிவித்துள்ளார். இந்த இயந்திர நெல் நடவுப்பணி தொடக்கத்திற்கு கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் ஜெகேகே வேளாண்மை கல்லூரி மாணவிகள் குமரகுரு வேளாண்மை கல்லூரி மாணவிகள் என 20க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று நாற்றுகளை இயந்திரங்களுக்கு எடுத்துக்கொடுத்தும் உரங்கள் தூவியும் விவசாயிகளுக்கு உறுதுணை புரிந்ததுடன் இயந்திர நெல் நடவுமுறை குறித்து களப்பணியில் ஈடுபட்டு நெல் நடவுப்பணியை கற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வின்போது கோபிசெட்டிபாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஜீவதயாளன் வட்டார தொழில்நுட்ப மேலாளர் அரவிந்தன் மற்றும் ராஜா ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்…

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.