ஈரோடு மாவட்டம் தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி, திம்பம் வழியாக அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இதில் 30 பயணிகள் இருந்தனர்.
திம்பம் 26ஆவது வளைவு பாதையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அதன் மீது மோதியது.

இதில் பேருந்தின் பின்புறம் சேதமைடந்தது. மேலும், பேருந்தில் இருந்த பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.
இச்சம்பவம் குறித்து ஆசனூர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வாகன விபத்தில் முதியவர் உயிரிழப்பு