ETV Bharat / state

சாலை வளைவில் அதிவேகத்தால் பறிபோன உயிர்! பதறவைக்கும் சிசிடிவி - சிசிடிவி

ஈரோடு: லாரி ஒன்று சாலை வளைவில் அதிக வேகமாக திரும்பியபோது பாரம் தாங்காமல் கவிழ்ந்த விபத்தில் விவசாயி பரிதாபமாக பலியான நிகழ்வு பதிவாகிய சிசிடிவி காட்சி நெஞ்சை பதறவைக்கின்றது.

File pic
author img

By

Published : Jun 13, 2019, 1:23 PM IST

Updated : Jun 15, 2019, 12:48 PM IST

கோவையிலிருந்து அட்டைகளை ஏற்றிக்கொண்ட லாரி ஒன்று பவானிசாகர் பகுதியில் உள்ள காகித ஆலைக்கு வந்துகொண்டிருந்தது. அப்போது புஞ்சைபுளியம்பட்டி அருகே லாரி வந்தபோது கணக்கம்பாளையத்தில் உள்ள சாலை வளைவில் அதிவேமாக திரும்பியது.

இந்நிலையில் விவசாயி பழனிசாமி ஒருவர் மளிகைக் கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு தனது வீட்டிற்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தை இயக்கமுற்பட்டபோது அதிவேகமாக திரும்பிய லாரி பாரம் தாங்காமல் சாலையோரம் இருந்த அவர் மீது கவிழ்ந்தது.

பதறவைக்கும் சிசிடிவி

இதில் பழனிசாமி கவிழ்ந்த லாரியின் அடியில் சிக்கிக்கொண்டார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஜேசிபி உதவியுடன் லாரியை நகர்த்தி பழனிசாமியை மீட்டனர். பின் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பழனிச்சாமி இறந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஒட்டுநர் அங்கிருந்து தப்பிச்சென்றார்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த புஞ்சை புளியம்பட்டி காவல் துறையினர் தப்பியோடிய லாரி ஒட்டுநரை தேடிவருகின்றனர். இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரின் நெஞ்சை பதறவைக்கிறது.

Intro:Body:

சத்தியமங்கலம் அடுத்துள்ள புஞ்சை புளியம்பட்டி அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் விவசாயக் கூலித் தொழிலாளி உயிரிழந்தார். கோவையிலிருந்து அட்டை பாரம் ஏற்றிய லாரி பவானிசாகர் பகுதியில் உள்ள காகித ஆலைக்கு செல்வதற்காக புஞ்சைபுளியம்பட்டி - பவானிசாகர் சாலையில் சென்று கொண்டிருந்தது லாரி கணக்கம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை வளைவில் திரும்பியபோது அதிவேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மளிகை கடை முன்பு கவிழ்ந்தது. அப்போது கணக்கரசம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி ( 68 ) விவசாயக் கூலித் தொழிலாளி மளிகை கடையில் சாமான்கள் வாங்கிக் கொண்டு கடை முன்பு நிறுத்திய தனது இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்றபோது லாரி பழனிச்சாமி மீது விழுந்ததில் லாரியின் அடியில் பழனிச்சாமி சிக்கிக்கொண்டார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து லாரியை நகர்த்தி காயம் பலத்த காயம் பட்ட பழனிச்சாமியை மீட்டனர்

 ஆம்புலன்சில் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போது கொண்டு செல்லும் வழியிலேயே பழனிச்சாமி இறந்தார். விபத்து நடந்தபோது லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினார். விபத்து குறித்து புஞ்சை புளியம்பட்டி  போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்   இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது,

Conclusion:
Last Updated : Jun 15, 2019, 12:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.