ETV Bharat / state

கர்நாடகாவிலிருந்து வேனில் மது பாட்டில்கள் கடத்தல் : ஓட்டுநர் கைது - Liquor trafficking near Erode police confiscate the liquor bottles

ஈரோடு : கர்நாடகாவிலிருந்து வாடகை வேனில் மது பாட்டில்கள் கடத்தி எடுத்துச் சென்ற ஓட்டுநரை சத்தியமங்கலம் காவல் துறையினர் கைது செய்தனர்.

liquor-trafficking-near-erode-police-confiscate-the-liquor-bottles

author img

By

Published : May 11, 2020, 1:35 PM IST

கரோனா நோய்த் தொற்றை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, மக்கள் பெருமளவில் கூட வாய்ப்புள்ள அனைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளன.

அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள பலரும் பிற மாநிலங்களுக்குச் சென்று மது பாட்டில்களை வாங்கி வந்து விநியோகிப்பதாக காவல் துறையினருக்கு தகவல்கள் கிடைத்தன.

இதனையடுத்து தமிழ்நாடு - கர்நாடக எல்லையான சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள புளிஞ்சூரில், கர்நாடக மாநில மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி சோதனைச் சாவடிகளில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, மைசூரிலிருந்து கோவை நோக்கி வந்த வாடகை வேனை பண்ணாரி சோதனைச் சாவடியில் ஆய்வு செய்த போது, அதில் 14 கர்நாடக மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சட்டத்தை மீறி, கர்நாடகாவிலிருந்து மது பாட்டில்களை கொள்முதல் செய்து கடத்திவந்த ஓட்டுநர் ராஜேந்திரனை, சத்தியமங்கலம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க : சென்னைவாசிகள் உடல் நலம் குறித்து சுய பதிவு செய்ய இணையதளம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.