ETV Bharat / state

தைப்பொங்கலையொட்டி அதிகம் விற்பனையாகும் கிளிஞ்சல் சுண்ணாம்பு

தைப்பொங்கல் நெருங்கிவரும் சூழ்நிலையில் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிளிஞ்சல் சுண்ணாம்பு விற்பனை அமோகமாக நடைபெற்றுவருகிறது.

Limestone seal increased in sathy for Thaipongalai
தைப்பொங்கலையொட்டி அதிகம் விற்பனையாகும் கிளிஞ்சல் சுண்ணாம்பு
author img

By

Published : Dec 30, 2020, 6:17 AM IST

ஈரோடு: தைப்பொங்கல் நெருங்கிக்கொண்டிருக்கும் வேலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் கிளிஞ்சல் சுண்ணாம்பு விற்பனை அமோகமாக நடைபெற்றுவருகிறது.

கடந்தாண்டைவிட இந்தாண்டு கிளிஞ்சல்கள் சுண்ணாம்பு அதிகப்படியாக விற்பனையாகிவருவதாக தெரிவிக்கிறார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள அந்தியூர் பகுதியில் கிளிஞ்சல் சுண்ணாம்பு விற்கும் கமலா.

கடந்த 10ஆண்டுகளாக இந்தத் தொழிலைச் செய்துவரும் அவர், "கேரளாவிலிருந்து கிளிஞ்சல்களை இறக்குமதி செய்து பதமாக சூளையில் வைத்து சுண்ணாம்பு தயாரித்து விற்பனை செய்துவருகிறார்.

தைப்பொங்கலையொட்டி அதிகம் விற்பனையாகும் கிளிஞ்சல் சுண்ணாம்பு

கிளிஞ்சல் சுண்ணாம்பு விற்பனை குறித்து நம்மிடையே பேசிய அவர், நாளொன்றுக்கு 5 டன் கிளிஞ்சல்கள் சுண்ணாம்பு வாரச் சந்தைகளில் விற்கப்பட்டுவருகின்றன. பவுடராக வாங்கி சுண்ணாம்பு அடித்தால், சுவரில் நன்றாக ஒட்டாது என்பதால் மக்கள் ஆர்வத்துடன் இந்தக் கிளிஞ்சல் சுண்ணாம்பை வாங்கிச் செல்கின்றனர்.

Limestone seal increased in sathy for Thaipongalai
கிளிஞ்சல் சுண்ணாம்பு வியாபாரி

இதன் வெண்மை எளிதில் மங்குவதில்லை. அதனாலே, மக்கள் இதனை அதிகம் விரும்புகின்றனர். தற்போது, 50 டன் அளவுக்கு கிளிஞ்சல் சுண்ணாம்பு விற்கப்பட்டுவருவதாகவும், எதிர்வரும் நாள்களில் மேலும், 20 டன்வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

இதையும் படிங்க: பொங்கல் கரும்புக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.