ஈரோடு மாவட்டம், தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட மல்குத்திபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜேக்கப்(50). இவருக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் ஆடு,மாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நாய் குரைக்கும் சத்தம் கேட்டு, வீட்டின் வெளியே வந்து பார்த்தார்.
அப்போது, ஆடுகளை சிறுத்தை கடித்துக் கொன்றது தெரியவந்தது. இதில் மூன்று ஆடுகள் பலியானது. ஜேக்கப் அளித்த புகாரின் பேரில் தாளவாடி வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். தோட்டத்தில் பதிவான கால்தடத்தை வைத்து சிறுத்தை என உறுதி செய்தனர். இதனால் அப்பகுதி விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.