ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஜீரகள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட திகனாரை, கரளவாடி, மல்லன்குழி, ஜோரகாடு பகுதிகளில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் என்ற ஒற்றை யானை விவசாய பயிர்களை சேதப்படுத்தியும், மனிதர்களை தாக்கியும் அட்டகாசம் செய்து வந்தது. இதனை அடக்குவதற்கு பொள்ளாச்சியில் இருந்து 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பத்தில் இருந்து வந்துள்ள அரிசிராஜா மற்றும் கபில்தேவ் கும்கி யானைகள் ஜோரக்காட்டு பகுதியில் முகாமிட்டுள்ளன. கும்கி யானைகளை காண்பதற்கு சுற்றுவட்டாரா கிராமங்களில் இருந்து குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் வந்தனர்.
கும்கி யானைகள் அருகே பார்வையாளர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. பார்வையாளர்கள் 200 மீட்டர் தூரத்தில் யானைகளை பார்த்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். கருப்பன் யானையின் கழுத்தில் ரேடியோ காலர் அணிவித்து கண்காணிக்கும் வகையில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வைகுண்ட ஏகாதசி - பெருமாள் கோயில்களிம் சொர்க்கவாசல் திறப்பு