ETV Bharat / state

2 பேரை கொன்ற காட்டு யானையை பிடிக்க களமிறங்கிய கும்கி யானைகள்!! - erode

தாளவாடி அருகே புதன்கிழமை யானை தாக்கியதில் விவசாயி மல்லநாயக்கர் பலியானதையடுத்து ஆட்கொல்லி யானையை பிடித்து வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு ஆனைமலையில் இருந்து சின்னதம்பி, ராஜவர்தன் ஆகிய 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

2 பேரை கொன்ற காட்டு யானையை பிடிக்க களமிறங்கிய கும்கி யானைகள்!!

author img

By

Published : Jul 7, 2022, 12:25 PM IST

ஈரோடு: தாளவாடி அடுத்த தர்மாபுரத்தில் வாழைத்தோட்டத்தில் இரவு நேர காவலுக்கு சென்ற விவசாயி மல்லநாயக்கர் (68) ஒற்றை யானை தாக்கியதில் புதன்கிழமை உயிரிழந்தார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு திகினாரையில் விவசாயியை இந்த யானை தாக்கி கொன்ற நிலையில் நேற்று மீண்டும் தர்மாபுரத்தில் விவசாயி மல்லநாயக்கரை தாக்கி கொன்றுள்ளது.

கடந்த இரு மாதத்தில் ஒற்றை யானையால் இருவர் கொல்லப்பட்டதால் ஆட்கொல்லி யானை பிடித்து வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என தாளவாடி கொங்ஹள்ளி சாலையில் அப்பகுதி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேரம் நடந்த போராட்டத்தின்போது அங்கு வந்த மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா,வனச்சரக அலுவலர் சதீஸ் மற்றும் தாளவாடி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகளிடம் எழுத்து பூர்வமான உறுதிமொழி அளிக்கப்பட்டது. இதன்படி ஆனைமனையில் இருந்து சின்னத்தம்பி கும்கி வரவழைக்கப்பட்டுள்ளது.

வனத்தில் இருந்து வெளியேறி கிராமத்துக்குள் வரும் பாதையில் கும்கி யானை நிறுத்தப்பட்டுள்ளது. கும்கி யானையின் வாசத்தை நுகரும்போது ஒற்றை யானை ஊருக்குள் வராது என்று நேற்று மாலை மற்றொரு கும்கி ராஜவர்தன் அழைத்துவரப்பட்டது.முதலில் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையாக கும்கி யானைகள் செயல்படும்.

2 பேரை கொன்ற காட்டு யானையை பிடிக்க களமிறங்கிய கும்கி யானைகள்!!

ஒற்றை யானை ஊருக்குள் புகாதபடி 4 கிமீ தூரம் அகழியை மேம்படுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து இரண்டு கும்கிகளுடன் ஒற்றை யானையை விரட்டும் பணி துவங்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பேருந்தை வழி மறித்த யானை கூட்டம் - அச்சத்தில் பயணிகள்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.