ETV Bharat / state

கருப்பனை விரட்ட கும்கிகளுடன் வனத்துறையினர் ரவுண்ட்ஸ்

தாளவாடி சுற்றுவட்டாரத்தில் பயிர்களை சேதப்படுத்தியும் மனிதர்களை தாக்கியும் இடையூறு செய்யும் கருப்பன் யானை மீண்டும் காட்டுக்குள் திருப்பி அனுப்பு கும்கிகளை கொண்டு வனத்துறையினர் முயற்சியில் செய்து வருகின்றனர்.

அட்டகாசம் செய்யும் கருப்பன்; ஒற்றையானை விரட்ட  கும்கியானைகள் ரவுண்ட்ஸ்

author img

By

Published : Jul 9, 2022, 9:51 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனத்தில் இருந்து வெளியேறி தொட்டகாஜனூர், திகினாரை, இரியாபுரம் பகுதியில் புகுந்து, அங்கு சாகுபடி செய்த விவசாயப்பயிர்களை சேதப்படுத்தியும் மனிதர்களை தாக்கியும் தொந்தரவு செய்யும் கருப்பன் என்ற ஒற்றை ஆண்யானையை காட்டுக்குள் திருப்பி அனுப்ப வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து ஆனைமலையில் இருந்து சின்னத்தம்பி, ராஜவர்தன் ஆகிய கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு கருப்பன் யானையை திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கருப்பன் யானை வந்த பாதையை ஆராய்ந்து 3 கிமீ தூரம் வரை தேடியபோது யானையின் கால்தடம் பதிவான இடத்தை வனத்துறை ஆய்வு செய்தனர்.

ஒற்றையானை விரட்ட கும்கியானைகள் ரவுண்ட்ஸ்

வனத்தில் இருந்து வெளியேறும்போது கருப்பன் யானை அதே இடத்தில் கும்கிகளுடன் திருப்பி அனுப்ப கால்நடை மருத்துவர் சதாசிவம், வன உயிரியலாளர் கிருஷ்ணகுமார், தாளவாடி வனச்சரக அலுவலர் சதீஸ்,வனப்பாதுகாப்பு படை அலுவலர் பழனிச்சாமி ஆகியோர் கொண்ட 20 பேர் குழு காத்திருக்கின்றனர்.

காட்டுக்குள் இருக்கும் கருப்பன் யானை, வெளியே வரும்போது மட்டுமே கும்கி யானைகள் தாக்குதல் நடத்தும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஆட்டின் விலை 70 லட்ச ரூபாய் - அப்படி என்ன விசேஷம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.