ETV Bharat / state

காட்டு யானையை விரட்டாமல் திரும்பிய கும்கி.. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.. - tamil latest news

ஈரோட்டில் காட்டு யானையை விரட்ட வந்த கும்கி யானை திரும்பி அழைத்து செல்லப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திரும்பி சென்ற கும்கி யானை
திரும்பி சென்ற கும்கி யானை
author img

By

Published : Jan 30, 2023, 8:09 AM IST

திரும்பி சென்ற கும்கி யானை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனப்பகுதியில் கிராமமக்களை அச்சுறுத்தி வந்த கருப்பன் யானையை பிடிக்க முத்து, கபில்தேவ் மற்றும் கலீம் ஆகிய கும்கி யானைகள் கடந்த 12ஆம் தேதி தாளவாடி வந்தன. தொடர்ந்து 3 நாட்களாக கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் மரியபுரம், சூசைபுரம், இரிபுரம் பகுதியில் நடமாடிய கருப்பனை பிடிக்க கும்கி யானைகள் பயன்படுத்தப்பட்டன.

கருப்பன் யானைக்கு இரு முறை மயக்க ஊசி செலுத்தப்பட்டது. ஆனால், கருப்பன் யானை வனத்துறையினரிடம் மாட்டிக்கொள்ளாமல் தப்பியது. அந்த வகையில் 16 நாட்களாக தாளவாடி திகினாரை முகாமில் தங்கியிருந்த 3 கும்கிகளின் பாகன்கள் தாய்லாந்து பயிற்சிக்கு செல்ல உள்ளதால், 3 கும்கிகளை மீண்டும் அந்தந்த முகாமுக்கு அழைத்து செல்ல வனத்துறை நடவடிக்கை எடுத்தது.

முதற்கட்டமாக கலீம் யானையை லாரியில் ஏற்றி கொண்டு செல்லும் போது, அங்கிருந்த மக்கள் கருப்பன் யானை பிடிக்கும் வரை கும்கிகளை கொண்டு செல்லக்கூடாது என்று அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து அங்கு வந்த வனத்துறை மற்றும் காவல்துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தெப்பக்காடு பகுதியில் இருந்து 3 கும்கிகளை வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தாய்லாந்து செல்லும் பாகனகள் தடுக்க வேண்டாம் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டதை அடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். 5 மணி நேர போராட்டம் நிறைவு பெற்றதற்கு பின் லாரியில் ஏற்றபட்டு கலீம் பொள்ளாச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையும் படிங்க: பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தான இடத்தில் வனத்துறை எச்சரிக்கை - எதற்காக?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.