ETV Bharat / state

கீழணையில் நீர் திறப்பு; 1,31,903 ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறும்

கீழணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், நான்கு மாவட்டத்தில் உள்ள ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 903 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பயன்பெறும்.

Kilanai
Kilanai
author img

By

Published : Aug 30, 2021, 5:00 AM IST

ஈரோடு : மேட்டூர் அணையிலிருந்து நிகழாண்டில் ஜூன் 12ஆம் தேதி பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது நீரானது கல்லணை வந்தடைந்தது. இதையடுத்து, கல்லணையிலிருந்து நீர் திறக்கப்பட்டு கீழணை வந்தடைந்தது.

கீழணை வந்த இந்நீர் தேக்கப்பட்டு கீழணை மற்றும் வீராணம் ஏரி ஆகியவற்றின் பாசன விவசாயிகள் வேண்டுகோளுக்கிணங்க கடலூர், தஞ்சாவூர், நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டத்திற்கு சம்பா சாகுபடிக்காக விகிதாச்சார அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.29) வடவாறு வாய்க்கால் வழியாக 600 கன அடியும், வடக்கு ராஜன் வாய்க்கால் வழியாக 400 கன அடியும், தெற்கு ராஜ வாய்க்கால் வழியாக 400 கன அடியும் பாசனத்திற்கு திறந்து விடப்பட்டது.

இதனால் கீழணையிலிருந்து கடலூர் மாவட்டத்திற்கு நேரடிப் பாசனமாக கொள்ளிடம் வடக்கு ராஜன் கான்சாகிப் வாய்க்கால், கவரப்பட்டு வாய்க்கால், கஞ்சன் கொல்ளை மற்றும் வடவாறு பாசனத்திற்கு உள்பட மொத்தம் 47ஆயிரத்து 997 பரப்பு மற்றும் தஞ்சாவூர் மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டத்திற்கு உள்ள கொள்ளிடம் தெற்கு ராஜன் வாய்க்கால், குமிக்கி மண்ணியாறு மற்றும் விநாயகன் தெரு வாய்க்கால் வழியாக நேரடி பாசனம் ஆக மொத்தம் 39 ஆயிரத்து 50 ஏக்கர் பரப்பிற்கு வீராணம் ஏரியில் இருந்து 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசனத்துக்கு என மொத்தம் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 903 ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதிக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தொழிலாளர் நல அமைச்சர் கணேசன் கடலூர் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து வீராணம் ஏரியில் உள்ள 34 மதகுகளும் திறக்கப்பட்டு அனைத்து மதகுகளிலிருந்தும் விநாடிக்கு 405 கன அடி நீர் விவசாயத்துக்கு திறந்துவிடப்பட்டது.

இதன்மூலம், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் ஸ்ரீமுஷ்ணம் சிதம்பரம் மற்றும் புவனகிரி தாலுகாவைச் சேர்ந்த 108 கிராமங்களில் மொத்தம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

இதையும் படிங்க : ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.