ETV Bharat / state

கடத்தப்பட்ட சிறுமி காவலன் செயலி மூலம் 20 நிமிடங்களில் மீட்பு! - child rescued with help of kavalan app

காரில் கடத்திச் செல்லப்பட்ட சிறுமி, காவலன் செயலி மூலம் தகவல் கொடுத்த 20 நிமிடங்களிலே பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

kidnap
திருவண்ணாமலை
author img

By

Published : Sep 5, 2021, 6:59 PM IST

ஈரோடு: திருவண்ணாமலை மாவட்டம், மேல்செட்டிபட்டியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், அவரது 17 வயது மகள், தன் தாயார், பாட்டி ஆகியோரின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார்.

இவர் கோபி அருகே அரசூரில் உள்ள தனியார் மில்லில் வேலைப் பார்த்து வந்தார். கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவத் தொடங்கியதை அடுத்து வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

18 வயது பூர்த்தியடையாத இளம் பெண்

இவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு மெக்கானிக் வேலை செய்து வரும் அண்ணாமலை என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. 18 வயது பூர்த்தியடையாத சிறுமி என்பதால், இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.

இத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அலுவலர்கள், தண்டராம்பட்டு காவல் துறையினர் உதவியுடன் அப்பெண்ணை மீட்டு பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் கடந்த மாதம் பாதுகாப்பு மையத்தில் இருந்து அப்பெண்ணை அவரது பாட்டி அழைத்து வந்து, திருமணத்திற்கு முன் வேலை செய்த மில்லிற்கு மீண்டும் வேலைக்கு அனுப்பி வைத்தார்.

காரில் சிறுமி கடத்தல்

இதையடுத்து, நேற்றிரவு அப்பெண்ணை அவரது கணவர் அண்ணாமலை, அவரது பாட்டி, உறவினர்களுடன் மில்லுக்குச் சென்று திருமண போட்டோவை காண்பித்து தங்களுடன் அனுப்பிவைக்குமாறு கோரியுள்ளனர்.

காவலன் செயலி மூலம் 20 நிமிடத்தில் சிறுமி மீட்பு

முதலில் அனுப்ப மறுத்த மில் நிர்வாகத்தினர், பின்னர் பெண்ணின் பாட்டியும் உடன் வந்திருந்ததால், வேறு வழியின்றி அனுப்பி வைத்தனர்.

காவலன் செயலியில் புகார்

ஆனால், அவர்களுடன் செல்லி விருப்பாத அந்த இளம்பெண், காரில் ஏறியதுமே செல்போனில் பதிவிறக்கம் செய்து வைத்திருந்த காவலன் செயலி மூலமாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து கட்டுப்பாட்டு அறையிலிருந்து கோபி போக்குவரத்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து உடனடியாக கோபிச்செட்டிப்பாளையம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, அப்பெண் சென்ற காரை கோபி அருகே மடக்கிப் பிடித்தார்.

20 நிமிடங்களுக்குள் மீட்பு

தொடர்ந்து, இளம்பெண் பத்திரமாக காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்நிலையில் ’காவலன் செயலி ’மூலமாக தகவல் கிடைத்த 20 நிமிடங்களுக்குள் பெண்ணை மீட்ட காவல் துறைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மேலும் இச்சம்பவம் குறித்து இளம்பெண்ணின் கணவர், பாட்டி, உறவினர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று கடத்தூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மயக்க மருந்து கொடுத்து மருமகளை வன்புணர்வு செய்த மாமனார் மீது போலீசில் புகார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.