ETV Bharat / state

தமிழ்நாட்டிற்கு காய்கறி வாகனங்கள் செல்ல கர்நாடக ஆட்சியர் உத்தரவு!

ஈரோடு: கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு காய்கறி ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்குமாறு அம்மாநிலத்தைச் சேர்ந்த ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

author img

By

Published : Mar 31, 2020, 7:52 PM IST

காய்கறி வாகனங்கள் செல்ல உத்தரவிட்ட ஆட்சியர்

தமிழ்நாடு - கர்நாடகா எல்லையில் உள்ள தாளவாடியில் விளையும் முட்டைகோஸ், தக்காளி, வெங்காயம், பீன்ஸ், வாழைக்காய், தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகள் வேன் மூலம் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது.

தினம்தோறும் நூற்றுக்கணக்கான காய்கறிவேன், டெம்போக்கள் கர்நாடகாவின் புளிஞ்சூர் சோதனைச்சாவடி வழியாக திருப்பூர், ஈரோடு, கோவை மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிக்கு செல்கின்றன. இரு மாநிலங்களிடையே காய்கறி வாகனங்கள் செல்வதற்கு தமிழ்நாடு அரசு பாஸ் வழங்கி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு காய்கறிகள் ஏற்றிக்கொண்டு வந்த வாகனங்கள் புளிஞ்சூர் சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு தமிழ்நாட்டிற்கு செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. அதேபோல மாநில எல்லையான கேர்மாளத்திலும் கர்நாடக சோதனைச்சாவடி வழியாக தமிழ்நாட்டிற்குச் செல்ல தடைவிதித்தனர்.

இது குறித்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்ட ஆட்சியர் ரவியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் ஆட்சியர் ரவி, காவல் கண்காணிப்பாளர் ஆனந்த நாராயணன், உதவி ஆணையாளர் நிகிதா ஆகியோர் மாநில எல்லையான கேர்மாளம் அடுத்த உடையார்பாளையம் சோதனைச்சாவடியில் ஆய்வு செய்தனர்.

பின்னர், கர்நாடகாவில் விளையும் காய்கறிகள் தமிழ்நாட்டில் விற்பனையாவதால் காய்கறி வேன்களை தடுக்க வேண்டாம் என்றும் 24 மணி நேரமும் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: குறுஞ்செய்தி அனுப்பினால் வீடு தேடி வரும் காய்கறிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.