ETV Bharat / state

“காரணாம்பாளையம் தடுப்பணை உயிரழப்பு; நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்”- பொதுமக்கள் எச்சரிக்கை! - Public alert

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகேயுள்ள காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கு வரும் சுற்றிலாப்பயணிகள் நீரில் மூழ்கி இறந்து போவது குறித்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தடுப்பணை உயிரழப்பு
தடுப்பணை உயிரழப்பு
author img

By

Published : Oct 15, 2020, 10:10 PM IST

ஈரோடு: கொடுமுடி அருகேயுள்ள காவிரியாற்றின் தடுப்பணையில் ஏற்படும் உயிரழப்புகளை தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கொடுமுடி அருகே மலையம்பாளையம், காரணாம்பாளையம் பகுதியில் காவிரியாற்றின் குறுக்கே, கடந்த 1961ஆம் ஆண்டு புகளூர் புதுக்கால்வாய்த் திட்டம் தலைமை மதகு என்கிற பெயரில் தடுப்பணை அமைக்கப்பட்டது.

காரணாம்பாளையம் தடுப்பணை உயிரழப்பு

இந்தத் தடுப்பணை தமிழ்நாடு முழுவதும் பிரசித்தி பெற்று சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்த்திடும் பகுதியாக மாறியது. வெளியூர் சுற்றுலாப் பயணிகள் விடுமுறை நாள்களில் குடும்பத்துடன் வந்திருந்து குளித்து உணவருந்தி மகிழ்ச்சியுடன் செல்வது வாடிக்கையாக உள்ளது.

இதனிடையே காரணாம்பாளையம் தடுப்பணையில் அதிகளவில் உயிருக்கு ஆபத்தான சுழல்கள் அமைந்துள்ளதுடன், அதிக ஆழமான பகுதியாகவும் உள்ளது. வெளியூரிலிருந்து வருபவர்கள் உற்சாக மிகுதியில் சுழல்களிலும், அதிக ஆழமான பகுதிகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் கூட திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர் ஸ்டீபன் ஆழமான பகுதிக்கு சென்று சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபோல் மாதம் ஒன்றுக்கு 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தாலும் காவல்துறையினர், இந்த உயிரிழப்பை அவர்களது குடும்பத்தினர் மிகவும் நிர்ப்பந்தப்படுத்தினால் மட்டுமே பதிவு செய்வதாகக் கூறப்படுகிறது.

என்றபோதிலும் காரணாம்பாளையம் தடுப்பணையில் உள்ள ஆபத்து குறித்து சுற்றுலாப் பயணிகளுக்குத் தெரிவித்திடும் வகையில் எச்சரிக்கைப் பலகைகளை அமைத்திட வேண்டும், நிரந்தரமாக காவலரை நியமித்து ஆழமான பகுதியில் குளிக்கத் தடை விதித்திட வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம், மாவட்டக் காவல்துறையினருக்கு பல முறை மனுக்கள் வழங்கியும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் பகுதி மக்களுக்கு ஆபத்தான பகுதிகள் தெரியும் என்பதால் அவர்கள் பாதுகாப்பாக குளிப்பதாகவும், வெளியூர் மக்கள் இது தெரியாத காரணத்தால் உயிரிழப்புகள் நிகழ்வதால் இதனைத் தடுத்திட தடுப்பணைகளை சுற்றிலும் எச்சரிக்கை பலகைகளை அமைத்திட வேண்டும்.

மேலும், தடுப்பணையில் உயிரிழந்தவர்கள் விபரத்தை ஊர்ப்பெயர்களுடன் அமைத்திட வேண்டும், காவலரை நியமித்து ஆழமான பகுதியில் குளிக்கத் தடை விதித்திட வேண்டும் என்கிற தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் நாங்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கு நாள்தோறும் நிகழும் உயிரிழப்புக்ளைக் கருத்தில் கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: கேரளாவில் கனமழை: முல்லைப் பெரியாறு அணையின் நீர்வரத்து அதிகரிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.